Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியால் பாக்கியாவிற்கு வந்த சந்தேகம்.. கோபியை திட்டிய ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகாவின் அம்மா அவருடைய மகனுக்கு போன் போட்டு உடனே கிளம்பி வா இங்கே பெரிய பிரச்சனை என சொல்கிறார்.

இந்த பக்கம் கோபி போனை ஹாலில் சார்ஜ் போட்டுவிட்டு மேலே ரூமுக்கு செல்கிறார். இந்த நேரத்தில் ராதிகா கோபிக்கு போன் போட ரொம்ப நேரமாக போன் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பாக்கியா போன் எடுத்து பார்க்கிறார். இந்த நம்பரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி ஓடிவந்து போனை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

ராதிகா போன் போட்ட சந்தோஷத்தில் கோபி போன் எடுத்துப் பேச உங்களால் எனக்கு எவ்வளவு பிரச்சனை என சத்தம் போடுகிறார் ராதிகா. நீங்க பண்ண பிரச்சனையால என்னோட போலீசில் புகார் அளித்திருக்கிறார். மயூராவை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சொல்கிறார். உங்களால எவ்வளவு பிரச்சனை என சொல்ல கோபி நான் வேணுமானால் வரட்டும்மா என கேட்க எனக்கு நீங்க ஏதாவது உதவி பண்ணனும்னு நெனச்ச என் வாழ்க்கையில் இருந்து மொத்தமாக போய்டுங்க என கூறி போனை வைக்கிறார்.

பிறகு பாக்கியா அந்த நம்பரை தன்னுடைய போனில் போட்டு சிலருக்கு போன் செய்ய எல்லோரும் ராங் நம்பர் எனக் கூறுகின்றனர். யாருடைய நம்பர் அது ரொம்ப தெரிந்த நம்பரா இருக்கே என குழம்புகிறார் பாக்கியா.

இந்த பக்கம் ராதிகாவின் அண்ணன் வீட்டுக்கு வந்ததும் மூவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகின்றனர். ஸ்டேஷனில் ராதிகா மற்றும் ராஜேஷ் என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட போலீஸ் இருவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி ராதிகாவை விசாரிக்க அவரது குடும்பத்தார் கோபியை தான் ராதிகா கல்யாணம் பண்ணிக்க போற என கூற ராஜேஷ் இல்லை என சண்டை போடும் வீடியோ ஆதாரத்தை காட்டுகிறார். உடனே அவர்களது குடும்பத்தார் இவர் சொல்வது பொய் இது சாதாரண பிரச்சனை தான் நீங்க வேண்டும்னா அவரையே வரச்சொல்லி விசாரிங்க என போலீசாரிடம் ராதிகாவின் அண்ணாவும் அம்மாவும் கூறுகின்றனர்.

இதனையடுத்து போலீஸ் கோபிக்கு போன் போட்டு குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கு வரச் சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update