Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை பார்த்து ஷாக்கான ராதிகா. ராதிகாவை கிண்டல் அடித்த செல்வி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா பியூட்டி பார்லர் சென்ற இருந்த நிலையில் ராதிகா பாக்யா வந்திருப்பது தெரியாமல் தன்னுடைய கல்யாண விஷயம் வருத்தமாக பேசுகிறார் ராதிகா.

சில சமயம் சந்தோஷமா இருக்கு சில சமயம் ஏண்டா கல்யாணம் பண்ணும்னு இருக்கு சில சமயம் கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சந்தோஷமாத்தான் இருந்தோம் எதுக்கு இந்த வாழ்க்கை என்று தோன்றுகிறது என புலம்புகிறார். அடுத்து பாக்யாவுக்கு ஹேர் கலரிங் செய்த பிறகு ராதிகாவை ஹேர் வாஷ் செய்ய அழைத்துச் செல்ல பாக்யாவும் ஹேர் வாஷ் செய்ய அழைத்துச் செல்லப்படுகிறார்.

அப்போது ராதிகா செல்வி மற்றும் ஜெனியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு செல்வி இவ்வளவு நேரமா கல்யாணத்தைப் பற்றி பேசி புலம்பிட்டு இருந்தது இந்த பொம்பள தான் போல என நக்கல் அடிக்கிறார். அடுத்து ராதிகா பாக்யாவை பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

வீட்டைத் தவிர எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டு மேடம் பியூட்டி பார்த்தால் தான் வருவாங்களா என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். பிறகு பாத்தியாவிடம் வேற என்ன மேடம் பண்ணனும் என கேட்க ஜெனி ஆன்ட்டிக்கு பேசியல் பண்ணி விடுங்க என சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பெடிக்யூர் மட்டும் போதும் என சொல்கிறார்.

அக்காவுக்கு எதுக்கு பேசியல் அக்கா இயற்கையாகவே அழகுதான் அதெல்லாம் இயற்கையில் அழகிய இல்லாதவங்க பண்றது என சைட் கேப்பில் ராதிகாவை ஓட்டுகிறார் செல்வி. இதனால் கடுப்பான ராதிகா போதும் என வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். அதன் பிறகு பாக்கியா வீட்டுக்கு வர ரொம்ப அழகா இருப்பதாக ஜெனியிடம் சொல்கிறார். வீட்டுக்குள் நுழையும்போது அத்தை என்ன சொல்வாங்களோ என பயந்து தயங்க சரியாக ஈஸ்வரி வர உடனே தலைமுடியை வாரி கட்டிக்கொண்டு உள்ளே செல்ல ஈஸ்வரி என்ன போகும்போது டல்லா போன, வரும்போது பளபளவென இருக்க என கேட்க எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள்.

அதன் பிறகு இல்லை, பாக்கியா கிட்ட ஏதோ மாற்றம் இருக்கு என யோசிக்கிறார் ஈஸ்வரி, இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update