Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவிற்கு வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி.. கோபி எடுக்கப் போகும் முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் கோபி மற்றும் ராதிகாவை இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு விட்டு செல்லுமாறு கூறுகிறார் போலீஸ். கோபி கையெழுத்து போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என கூறுகிறார். ஆனால் ராதிகா தயக்கத்துடன் இருக்க அவருடைய அண்ணனும் அம்மாவும் அவரை வெளியே அழைத்துச் சென்று மயூரா இப்போ உன்னோட இருக்கணும்னா நீ கையெழுத்து போட்டு தான் ஆகணும் என கூறுகின்றனர்.

பிறகு வேறு வழியில்லாமல் ராதிகா கையெழுத்து போடுகிறார். கோபியும் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்ட பிறகு போலீஸ் ராஜேஷ் இனி நீங்கள் இந்த விஷயத்தை கோர்ட்டில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என சொல்லி அவரை அனுப்பி வைக்கின்றனர்.

இந்த பக்கம் பாக்கியா மயூராவிடம் பேசி அவரை சமாதானம் செய்கிறார். உன்ன அம்மா அவ்வளவு சீக்கிரம் உங்க அப்பாகிட்ட அனுப்பி விட மாட்டாங்க, கண்டிப்பா நீ அம்மா கூட தான் இருப்ப பயப்படாத என கூறுகிறார். மயூவுக்கு பால் காய்ச்சி கொடுத்து அவரைத் தூங்க வைக்கிறார்.

அதன்பிறகு ராதிகாவை அவரது அண்ணனும் அம்மாவும் வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். வீட்டுக்கு வந்த ராதிகா பெல் அடிக்க பாக்கியா கதவு திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு பிரச்சனை எதுவும் இல்லல, நீங்க ஏன் மயூவை தனியா விட்டுட்டு போனீங்க? எனக்கு போன் பண்ணி இருந்தா நான் வந்து பார்த்துக்கிட்டு இருப்பேன்ல, நண்பர்களாக இருக்கிறது எதுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்ளத்தானே? நான் ஒரு ஆள் இருக்கிறது உங்களுக்கு மறந்து போச்சா.? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிடும் நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க என பாக்கியா கூறுகிறார்.

இந்த பக்கம் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் கோபியை தனியாக அழைத்துச் சென்று போலீசில் எழுதிக் கொடுத்தது எல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன முடிவில் இருக்கீங்க என கேட்க கோபி யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update