தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாண மண்டபத்துக்கு வந்திருந்த அமிர்தாவை ஈஸ்வரி கண்டபடி திட்டி வெளியே அனுப்ப ஜெனி கொஞ்சம் பொறுமையா இருங்க என சொல்ல நான் கல்யாணத்தை நிறுத்த வரவில்லை என கதற ஈஸ்வரி அமிர்தாவை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டு உள்ளே வா என மேலே சென்று விடுகிறார்.
அதன் பிறகு அமிர்தா அங்கிருந்து கிளம்ப ஜெனி அவரை கூட்டிச் சென்று ஒரு சாலை வைத்து எழில் மீது எந்த தப்பும் கிடையாது, எழிலுக்கு இந்த கல்யாணத்துல எந்த விருப்பமும் கிடையாது என சொல்கிறார். நீங்க எழில தப்பா நினைக்காதீங்க என சொல்ல நான் யாரையும் தப்பா நினைக்கிற மனநிலையில் இல்லை என சொல்கிறார். பிறகு அம்மா தான் அங்கிருந்து கிளம்ப மயக்கத்துடன் இதை எப்படியாவது ஜெனியிடம் சொல்லியாக வேண்டும் என மேலே வருகிறார்.
இங்கு எல்லோரும் இருக்க ஜெனி எதுவும் சொல்ல முடியாமல் நிற்க, கோபி வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல வர்ஷினியின் அப்பா உங்களுக்கு ரூம் இருக்கு என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு வர்ஷினி ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் என உள்ளே போக ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியும் ரூமுக்குச் செல்ல செழியன் போன் வந்ததும் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஜெனி அமிர்தா வந்த விஷயத்தை எழிலிடம் சொல்கிறார்.
அதன் பிறகு எழில் அமிர்தாவை தனியாக அழைத்துச் சென்று குடும்பத்தில் நடந்த விஷயங்களை சொல்கிறார். ஈஸ்வரி காலில் விழுந்து கெஞ்சிய விஷயத்தை சொல்ல இதையெல்லாம் கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.