தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகாவின் அண்ணன் கோபி இடம் உங்களுக்கு ராதிகாவை திருமணம் செய்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லையா? உண்மையில் உங்க மனதில் என்ன இருக்கிறது என கேட்க கோபி நிச்சயமாக ராதிகா கல்யாணம் செய்து கொள்வேன். அவளிடம் பாக்கியா தான் என்னுடைய மனைவி என மறைத்ததை தவிர வேறு எந்த பொய்யையும் சொல்லவில்லை.
நான் இந்த வாழ்க்கையே புடிக்காமத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் நீங்க வேண்டுமா எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. ராதிகாவை எனக்கு இப்ப தெரியாது, திருநெல்வேலியில் இருக்கும் போதிலிருந்தே எனக்கு ராதிகாவை தெரியும். திரும்பவும் அவளை பார்த்தது கடவுள் கொடுத்த வரமாக தான் நினைக்கிறேன் எப்படியாவது அவளிடம் பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வையுங்கள் என கூறுகிறார்.
இந்த பக்கம் பாக்கியா ராதிகாவிற்கு பொறுமையாக இருங்கள். நல்லா யோசிச்சு முடிவு எடுங்க. மயூராவுக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. அவர் செய்த சின்ன சின்ன தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள உங்கள் நல்லா பார்த்துப்பாரா என்பதை மட்டும் பாருங்க. எதிர்காலத்தை யோசித்து முடிவெடுங்கள் என்று கூறுகிறார்.
பிறகு வீட்டுக்குச் செல்லும்போது கோபி காரில் சென்று கொண்டிருக்கும் போது பாக்கியாவை பார்த்து அவரை அழைத்துக் கொண்டு செல்ல அப்போது ராதிகா வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்த விஷயத்தை கூறுகிறார்.
அதன்பிறகு ராதிகாவின் அண்ணன் கோபியை திருமணம் செய்து கொள்ள சொல்லி பேசுகிறார். ஏனென்றால் ராகேஷ் மயூவை உன்னிடம் இருந்து பிரித்து விடுவான் என சொல்ல அது மட்டும் நடக்கவே நடக்காது. நான் இங்கே இருந்தா தானே பிரச்சினை. நான் வேற எங்கயாவது போய் விடுகிறேன் என கூறுகிறார்.
பிறகு மயூவிடம் எல்லாம் உன்னுடைய எதிர்காலத்துக்காக தான் செய்கிறேன். இப்போ உனக்கு இது தவறாக தெரியலாம். ஆனா பின்னாடி என் பக்கம் இருக்கும் நியாயம் உனக்கு புரியும் என கூறுகிறார். மயூரா கோபி அங்கிள் பாவம் என சொல்ல ராதிகா பாக்கியா ஆன்ட்டி பாவம் என உளறுகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.