Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரியை சமாதானப்படுத்திய பாக்கியா. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் பேச கோபப்படும் ராதிகா கோபியின் கழுத்தை நெரிக்க போகிறார். பிறகு ராதிகா ரூமுக்குள் எழுந்து சென்றுவிட்ட நாளுக்கு நாள் உன்னுடன் நிலைமை ரொம்ப மோசமா போய்க்கிட்டே இருக்குடா என கோபி புலம்புகிறார்.

மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து இருக்க அப்போது எல்லோரும் வீட்டுக்கு வர பாக்கியா பயந்து நடுங்குகிறார். எழில், ராமமூர்த்தி என எல்லோரும் பார்த்துக்கலாம் விடுமா என சொல்ல பாக்யா பயப்படுகிறார். பிறகு ஈஸ்வரியிடம் பேச அவர் எழுந்து கோபமாக ரூமுக்குள் சென்று விடுகிறார்.

அடுத்து ரூமுக்கு போகும் பாக்யா ஈஸ்வரியிடம் பேச முயற்சி செய்ய ஈஸ்வரி வெளியே போ என திட்டுகிறார். அத்தை நான் பண்ணுவது தப்பு தான் உங்க மேல இருக்க பயத்தில் தான் உங்ககிட்ட சொல்லல ஆனா எதுக்காக அப்படி பண்ணேன்னு மட்டும் கேளுங்க என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி எதுக்காக பண்ண என கேட்க பாக்கியா கேன்டீன் ஆர்டர் எடுக்க போனபோது ராதிகா இங்கிலீஷில் கேள்வி கேட்டு அவமானப்படுத்திய விஷயத்தை சொல்கிறார். உங்க மருமக யார்கிட்டயும் அவமானப்பட்டு நிற்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கிலீஷ் கிளாஸ் போனேன் இப்ப சொல்லுங்க நான் செஞ்சது தப்பா என கேட்க நீ இங்கிலீஷ்ல பேசணும் அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என ஈஸ்வரி கூறுகிறார். இப்படி ஒரு வழியாக ஈஸ்வரியை சமாதானப்படுத்தி வெளியே வருகிறார் பாக்கியா.

அதன் பிறகு ராதிகா வீட்டில் இனியா போட்டோக்களை காட்டிக் கொண்டிருக்க அதைப் பார்த்து மயூ கோபியிடம் நீங்களும் மம்மியும் மட்டும் போய் இருக்கீங்க ஏன் என்னை கூட்டிட்டு போகல என கேட்க கோபி எங்கே என கேட்க இனியா அம்மாவோட கேண்டீன் ஓபனிங் ஏன் கூட்டிட்டு வரலன்னு கேட்கிறா என சொல்கிறார்.

உடனே கோபி ஆமா எதுக்கு அங்க போகணும் என கேட்க நீங்களும் மம்மியும் தான் போய் இருக்கீங்களே என சொல்ல இனியா கோபியின் போட்டோவை எடுத்துக்காட்ட உடனே அங்கு வரும் ராதிகா போட்டோவை பார்த்து கோபப்படுகிறார்.

பிறகு ராதிகா ராமமூர்த்தியிடம் நீங்க எதுக்கு அங்க போனீங்க? உங்களுக்கும் பாக்யாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க ராமமூர்த்தி அவ என் மருமகள் என சொல்ல நான் தானே உங்க மகனோட பொண்டாட்டி அப்போ நான் தான் உங்க மருமக என சொல்ல ஒரு நாளும் உன்னை எங்க மருமகளா ஏத்துக்க முடியாது, இவன் பாக்யாவுக்கு பண்ணிட்டு வந்தது பச்சை துரோகம். என்ன நடந்தாலும் நாங்க பாக்கியா கூடத் தான் இருப்போம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

உடனே ராதிகா அப்போ எதுக்கு எங்க வீட்ல இருக்கீங்க என கேட்க ராமமூர்த்தி சரியா கேட்ட நான் ஒன்னும் என் மகனோட வீடு, என் மருமக நீ என்ற உரிமையில் இருக்கல என் பேத்தி இங்கே இருக்கா, அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று தான் இருக்கேன் என சொல்கிறார்.

அடுத்து ராமமூர்த்தி இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே செல்ல ராதிகா கோபியிடம் பார்த்தீர்களா உங்க அப்பா என்னை எவ்வளவு அவமானப்படுத்துகிறார் என்று, உங்க அம்மாவும் அப்பாவும் நான் தான் அவங்க மருமகள் என்று அவங்க வாயால சொல்லனும், நீங்க சொல்ல வைக்கணும் அதுக்கப்புறம் என்கிட்ட பேசுங்க என கோபிக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update