தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா சுடிதாரில் கீழே இறங்கி வர ஈஸ்வரி, செழியன் என எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.
பிறகு எழில் போட்டோக்களை எடுக்க பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஆபீசுக்கு கிளம்புகிறார். அடுத்து ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் ராதிகா வீட்டில் நடந்த விஷயத்தை சொல்ல அவ யாரு இனியாவை கண்டிக்க? இனியாவை கண்டிக்க அவ அம்மா இருக்கா, நீங்க இனியாவை கூட்டிட்டு இங்க வந்துடுங்க என சொல்ல ராமமூர்த்தி அப்படி எல்லாம் கூட்டிட்டு வர முடியாது அவளா வரணும் என கூறுகிறார்.
அடுத்து ராதிகா கேன்டினில் வந்து பார்க்க யாரும் இல்லாமல் இருக்க சுடிதார் போட சொன்னதும் என் முன்னாடி அசிங்கப்பட வேணான்னு சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க போல என நினைத்துக் கொண்டிருக்க ஒவ்வொருத்தராக சுடிதாரில் வந்து ஷாக் கொடுக்கின்றனர்.
செல்வி திடீரென ராதிகாவின் பின்னாடி இருந்து குதித்து ஷாக் கொடுக்கிறார். எனக்கு ரொம்ப நாளா சுடிதார் போடணும்னு ஆசை ஆனா யாராச்சும் ஏதாச்சு சொல்லுவாங்கன்னு போடாம இருந்தேன். இப்போ உங்களால போட்டுட்டேன் ரொம்ப தேங்க்ஸ் என சொல்ல ராதிகா டென்ஷன் ஆகிறார். அதன் பிறகு நாங்கள் எல்லாரும் சுடிதார் போட்டுட்டோம், அக்கா தான் பாவம் நான் போட மாட்டேன் என்று கூச்சப்பட்டுக்கிட்டு இருக்கு. அதுக்காக நீங்க கேன்டீன் காண்ட்ராக்ட்டை கேன்சல் பண்ணிடாதீங்க ப்ளீஸ், ப்ளீஸ் என கொஞ்சுகிறார். இப்ப கூட அக்கா உங்களுக்கு பயந்துகிட்டு தான் ஒளிஞ்சிகிட்டு இருக்கு என சொல்லி பாக்கியாவை அழைக்கிறார்.
செல்வி சொன்னதை நம்பி ராதிகா பாக்கியாவை புடவையில் வருவார் என எதிர்பார்க்க அவர் சுடிதாரில் வந்து ஷாக் கொடுக்கிறார். ராதிகா அருகே வந்த பாக்கியா எப்படி இருக்கு மேடம் என கேட்க ராதிகா அமைதி காக்கிறார். சுடிதார் போட சொன்னா இவங்க கேன்டீனை விட்டு ஓடிடுவாங்கன்னு நினைச்சீங்க, ஆனா நாங்க ஓடல என பதிலடி கொடுக்கிறார். வாக்கிங் போகும்போது சுடிதார் போட்டுட்டு இருக்கவங்க ஈசியா நடந்து போவாங்க, எனக்கும் ஆசை இருக்கும் ஆனா எங்க வீட்ல அதெல்லாம் போட முடியாது ஏன்னா எங்க அத்தை ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
ஆனா நீங்க சுடிதார் போட சொன்னதும் அதை அவங்க கிட்ட சொன்னதும் டக்குனு ஓகே சொல்லிட்டாங்க, ரொம்ப தேங்க்ஸ் மேடம் என சொல்லி ராதிகாவை வெறுப்பேத்துகிறார். அது மட்டுமல்லாமல் அடுத்து எங்களுக்கு வேற என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று யோசிங்க, நீங்க சொல்ற விஷயத்தால் எங்களுக்கு நல்லது நடந்தா சந்தோஷம் தானே என சொல்கிறார்.
இதனால் ராதிகா பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து தெறித்து ஓடுகிறார். அதன் பிறகு பாக்யா ஞாபக மறதியில் துணி மாற்றாமல் நேராக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்துவிட அவரை சுடிதாரில் பார்த்த அனைவரும் அசந்து போய் பாராட்டுகின்றனர். பழனிச்சாமி என்ன பாக்கியா மேடம் பொண்ணு மாதிரி வந்து உக்காந்துட்டு இருக்கீங்க என சொல்ல பாக்கியா வெக்கப்படுகிறார்.
அதன் பிறகு பாக்யா எழுந்து நின்று எல்லோரிடமும் இன்னைக்கு ஈவினிங் என்னுடைய பையனோட பொண்ணுக்கு பர்த்டே செலிப்ரேஷன் வச்சிருக்கோம், நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும் என அழைப்பு விடுக்கிறார். என்னது உங்களுக்கு மூணு வயசுல பேத்தியா என எல்லோரும் வியப்பாக கேட்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.