தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் எல்லோரையும் நிலாவின் பிறந்தநாள் பார்ட்டிக்காக அழைப்பு கொடுக்க எல்லோரும் கண்டிப்பாக வருவதாக சொல்கின்றனர்.
அதன் பிறகு பாக்யா வீட்டில் இருக்க செல்வியும் வீட்டுக்கு வர எழில் மற்றும் அமிர்தா இருவரும் நிலா பாப்பாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும் என திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்க அப்போது ஈஸ்வரி அங்கு வந்து என்ன இதெல்லாம் எதுக்கு என கேட்க இன்னைக்கு நிலா பாப்பாவுக்கு பிறந்தநாள் என சொல்கிறார்.
மேலும் நம்ம வீட்டுக்கு நிலா வந்து கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் சிறப்பாக கொண்டாடலாம் என்று ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறார். அடுத்து ஈஸ்வரியும் பலூன் ஊதி கொடுக்கிறார். அடுத்து ராமமூர்த்தி மற்றும் இனியா என இருவரும் வர எல்லாருக்கும் தெரிந்திருக்கு எனக்கு மட்டும்தான் சொல்லலையா என ஈஸ்வரி கேட்க பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
உடனே உங்ககிட்ட சொன்னா நீங்க சும்மா இருக்க மாட்டிங்க. நானும் உதவி பண்றேன்னு சொல்லுவீங்க, உங்களுக்கு கை கால் வலிக்கும் அதனால் தான் சொல்லல என கூறுகிறார். அமிர்தாவின் அப்பா அம்மா வீட்டுக்கு வருகின்றனர்.
அதன் பிறகு நிலா பாப்பா, எழில் மற்றும் அமிர்தா மூவரும் வீட்டுக்கு வர ஏற்பாடுகளை பார்த்து அமிர்தா ஷாக் ஆகிறார். பிறகு அப்பா அம்மாவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு பாக்யாவின் கூட படிப்பவர்கள் வீட்டுக்கு வர பிறந்தநாள் பார்ட்டி நடந்து முடிகிறது.
அடுத்து எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி தனக்கு கல்யாணம் ஆகாத விஷயத்தையும் அதற்கான காரணங்களையும் சொல்ல ஈஸ்வரி உங்களுக்கு நான் பொண்ணு பார்க்கவா என கேட்க சரி பாருங்க என சொல்கிறார். அனைவரும் கலகலப்பாக பேசுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.