Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியா மற்றும் ராதிகாவுக்கு ஏற்பட்ட வாக்குவாதம். சிக்கி தவிக்கும் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ராதிகா கோபியிடம் காபி போட்டு தரட்டுமா என கேட்க வேண்டாம் நானே போட்டுக்கிட்டேன் என கூறுகிறார் அடுத்து ராமமூர்த்தியிடம் கேட்க அவரும் வேண்டாம் என சொல்கிறார். பிறகு ராதிகா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க கோபி என்ன விஷயம் என கேட்க ராதிகா இனியாவத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன் அவ இன்னும் காணும் என சொல்கிறார்.

மேலும் வர வழியில் அவளை பாத்துட்டு தான் வந்தேன் என்ன சொல்ல கோபி வந்துருவா நீ பயப்படாதே என சொல்ல பிறகு இனியா வீட்டுக்கு வர உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா எங்க போயிருந்த என சத்தம் போட இனியா கடுப்பாகிறார். நீங்க கார்ல வந்தீங்க நான் சைக்கிள்ள வந்தேன் ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்குல்ல என சொல்ல ராதிகா நாளையிலிருந்து நீ சைக்கிள்ல டியூஷன் போகாத என கூறுகிறார்.

அடுத்து இனியா அதை நீங்க சொல்லாதீங்க நான் சைக்கிள் தான் போவேன் என சொல்கிறார். பழையபடி தாத்தாவே உன்னை கூட்டிட்டு போகட்டும் என சொல்ல தாத்தாவுக்கு முடியலன்னு தான் சைக்கிள் வாங்குனது என இனியா கூறுகிறார். உடனே ராதிகா அப்போ நாளையிலிருந்து ஒரு ஆட்டோ அரேஞ்ச் பண்ணலாம் இவ ஆட்டோவில் போயிட்டு வரட்டும் அப்பதான் யார் கூடயும் பேசாம நேரா வீட்டுக்கு வருவா என சொல்ல கோபி எதுக்கு தேவையில்லாத செலவு என கேட்க ராதிகா இவ ஆட்டோல போய்ட்டு வரட்டும் அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன் என சொல்ல இனியா நான் எதுக்கு ஆட்டோவுல போகணும் என்னால போக முடியாது என சொல்லி சொல்கிறார். இரண்டு பக்கமும் சிக்கிக் கொண்டு கோபி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா மீண்டும் பழனிசாமி சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு கேக் செய்து பார்க்க இந்த முறை கேக் சூப்பராக வருகிறது. எல்லோரும் பாக்யாவை பாராட்டி தள்ளுகின்றனர். பிறகு பாக்கியா கேன்டினில் இருக்கும்போது செய்த கேக்கை தனது டீமில் உள்ளவர்களுக்கு கொடுக்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு சூப்பர் என சொல்கின்றனர்.

அதன் பிறகு அங்கு வரும் ராதிகா இன்னைக்கு ஈவினிங் நீங்க செஞ்ச கேக்கு இங்க இருக்கணும் இல்லன்னா கேண்டீன் காண்ட்ராக்டர் க்ளோஸ் பண்ணிடுவே என மிரட்ட பாக்யா நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் ஆனா எனக்கு கேக் செய்ய வரல, இன்னும் ரெண்டு நாள் மட்டும் டைம் குடுங்க என கெஞ்சி நடிக்க ராதிகா அதெல்லாம் டைம் கொடுக்க முடியாது இன்னைக்கு ஈவ்னிங் தான் உங்களுக்கு டெட்லைன் என சொல்கிறார். பாக்கியா வசமா மாட்டினாங்க என ராதிகா சந்தோஷமாக அங்கிருந்து நகர பிறகு பாக்யாவும் செல்வியும் சாயங்காலம் வரட்டும் வச்சுக்கலாம் என சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து கிளாசில் பாக்கியா செய்த கேக்கை எல்லோருக்கும் கொடுக்க எல்லோரும் சூப்பராக இருப்பதாக பாராட்டுகின்றனர். பிறகு ராதிகா என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலா இருக்கு நாளைக்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என சொல்ல பாக்கியா கண்டிப்பாக சொல்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update