Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவை பற்றி எழிலுக்கு தெரியவந்த உண்மை.. ராஜேஷால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா வாயுவை மும்பைக்கு அழைக்க அவர் நான் வரமாட்டேன் என சொல்ல ஒரு கட்டத்தில் மயூவை அறைந்து விட இதனால் கடுப்பான ராதிகாவின் அம்மா ராதிகாவை அறைகிறார்.

பிறகு கோபியை வெளியில் சந்தித்து ராஜேஷ் உன் போக்கு சரி இல்லையே என எச்சரிக்க கோபி கோபமாக பேச உன்னுடைய வீட்டில கூடிய சீக்கிரம் ஒரு பூகம்பம் வெடிக்கும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ராஜேஷ்.

ராதிகாவின் அண்ணன் கோபியை திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்ல ராதிகா முடியாது என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவின் கெஞ்சிக் கூத்தாடி அவர் என்னுடைய மனதை மாற்றிக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

நேராக பாக்யாவின் வீட்டிற்கு செல்ல ஈஸ்வரி ஜெனி இனிய என மூவரும் அமர்ந்து கொண்டிருக்க இவரைப் பார்த்த கோபியின் அப்பா ஆவேசப்பட்டு வெளியே போக சொல்கிறார். அதற்குள் இனியா மேலே சென்று ஏழிலை கூட்டி வருகிறார். இருவரும் ராஜேஷ் வெளியே துரத்த முயற்சி செய்ய ஈஸ்வரி உனக்கு என்ன சொல்லணும் சொல்லு என கேட்க கோபி பற்றிய உண்மைகளை கூறுகிறார். கோபி எதுக்கு என் பொண்டாட்டிய பார்க்க வரணும் என் குடும்பத்தை எதுக்கு சீரழிக்கும் என சத்தம் போட ஈஸ்வரியும் கோபி அப்படிப்பட்டவன் இல்லை என சொல்ல அதை இந்த பெரிய மனுஷன் கிட்டயும் உங்க பேரன் கிட்டயும் கேளுங்க என சொல்கிறார்.

எழில் ராஜேஷை வெளியே துரத்தி அப்பா அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளியே வந்து விட்டார் என சொல்ல யார் சொன்னது? போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்குவேன், என் மனைவியை விவாகரத்து பண்ண போறேன்னு சொல்றான். உங்க அம்மாவ தான் விவாகரத்து பண்ணப் போறதா சொல்றாங்க என ராதிகா வீட்டின் வெளியே சண்டை போட்ட வீடியோவை காண்பிக்கிறார். இதைப் பார்த்த எழில் அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்க சரமாரியாக பேசி விட்டு ராஜேஷ் அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update