Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி மீது கோபப்பட்ட ராதிகா, எழில் கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshimi serial episode update 16-01-2025

செந்தில் கேட்ட கேள்விக்கு கோபி பதில் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் வந்து ஈஸ்வரி நீ என்ன பத்தி பாக்யா கிட்ட எதுக்கு அப்படி பேசின என்று கேட்க நான் அப்படி தான் பேசுவேன் நீங்க ஒரு கடைஞ்சு எடுத்து சுயநலவாதி உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க அடுத்தவங்களோட சுயமரியாத கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. பாக்யா மாதிரி அமைதியா இருப்பான்னு மட்டும் நினைக்காதீங்க என்று மிரட்டி எடுக்க ஈஸ்வரி எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

நீங்க ஒழுங்கா நடந்துக்கோங்க இல்லன்னா நான் இப்படி தான் பேசுவேன் பெரிய மனுஷி என்ற மரியாதை இல்லாம பேசுற என்று ஈஸ்வரி கேட்க அந்த ஒரு மரியாதைக்காக தான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்க இல்லனா அவ்வளவுதான் இன்று மிரட்டி கொண்டிருக்க இனியா வருகிறார் உடனே ராதிகா அமைதியாக மாறி வா இனியா என்று கேட்க இல்லை ஏதோ சத்தம் கேட்டது அதுக்காக தான் வந்தேன் என்று சொல்ல, இல்ல நானும் அத்தையும் கொஞ்சம் பேசிகிட்டு இருந்தோம் என்று சொல்ல பேசிக்கிட்டு இருந்தீங்களா சண்டை போட்ட மாதிரி சத்தம் கேட்டது என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் வக்கீல் அரேஞ்ச் பண்ணி இருந்த இல்ல அதுக்கு தேங்க்ஸ் சொன்னாங்க அதுக்கு நான் பரவால்லன்னு சொல்ல என்று சொல்ல ஈஸ்வரி அமைதியாக நிற்கிறார். நீங்க போங்க அத்தை நான் பாத்துக்குறேன் என்று சொல்ல ஈஸ்வரி ரூமுக்கு சென்று விட இனியாவிடம் உனக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரும் சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபியும், ராதிகாவும் ஹாலில் உட்கார்ந்து போனில் எதையோ பார்த்து ஆர்டர் போட்டு வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க கிச்சனில் ஈஸ்வரி என்னமோ இவ காசு மாதிரி வாங்க சொல்றா என்று பேச பாக்யா அவங்க சம்பாதிக்கிறாங்க அவங்க வாங்கறாங்க உங்களுக்கு என்ன அத்தை என்று சொல்ல எல்லாம் சம்பாதிக்கிறது என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் வீட்டுக்கு வர அவரை வர வைத்து நலம் விசாரிக்கின்றனர் ராதிகாவும் பாக்யாவும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கிறார் அவரை சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று சொல்ல அவரும் சரி என சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி கோபி முன்னாடி பார்க்க லைப் முன்னாடி பார்த்திருக்கும் வித்தியாசம் இருக்கா என்று கேட்க இருக்குமா என்று சொல்லுகிறார் ஆமா இப்பதான் கோபி முகம் பளிச்சுன்னு இருக்கு தேஜஸா இருக்கான். இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கா என்று ராதிகாவை வம்பு இழுக்கிறார். உடனே ராதிகா ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணி இருக்காங்க அவங்க போய் தனியா பேசட்டும் என்று சொல்ல, கோபியும் ஆமா தனியா பேசணும் என்று அழைத்து சென்று பேசுகிறார்.

உடனே ஈஸ்வரி ராதிகாவிடம் நான் பேசிட கூடாதுன்னு தானே இப்படி பண்ணேன் என்று சொல்ல ஆமா சூப்பரா கண்டுபிடிச்சிட்டீங்களே என்று பேச ஈஸ்வரி டென்ஷன் ஆகிறார். பாக்கியாவை பார்த்து முறைக்க என்னை எதுக்கு கர்த்தர் முறைக்கிறீங்க நான் ஒன்னும் பண்ணல என்று சொல்லுகிறார் பாக்யா. உடனே வெளியே வந்த கோபியிடம் என்னடா ரெண்டு பொண்டாட்டி வச்சிட்டு சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்க என்று கேட்க முதல்ல நானும் பாக்கியா உள்ள விடமாட்டா என்று பிரச்சினை பண்ணுவா தான் நினைச்சேன் ஆனா எல்லாமே ஸ்மூத்தா போய்கிட்டு இருக்கு இதே மாதிரி போனா நல்லா தான் இருக்கும் என்று சொல்ல செந்திலிடம் பாக்யாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதனை ராதிகா மறைந்து நின்று கேட்டு விட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு செந்திலை அனுப்பிவிட்டு கோபி வந்து உட்கார ஈஸ்வரிக்கு பாக்யா காபி கொடுக்கிறார் என்னமா இந்த டைம்ல குடிக்கிறீங்க என்று கேட்க தலை வலிக்கிற மாதிரி இருக்கு அதனால தான் என்று சொல்லுகிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடம் பார்த்து ஏழில் வர பாக்யா இப்பதான் உன்னை நினைச்சுக்கிட்டே இருந்தேன் என கரெக்டா வர என்று சொல்ல நானும் தான் உன்னை நினைக்கிறேன். அப்போ வர மாட்டேங்குற என்று சொல்லுகிறார் ஈஸ்வரி இருக்கும்போது திட்டிட்டு இப்ப நினைக்கிறியா ஈஸ்வரி என்று எழில் கேட்க திட்டினாலும் நான் பாசமா தான் இருப்பேன் என்று சொல்லுகிறார். உடனே கோபி நான் மறுபடியும் கேட்கிறேன்னு நினைக்காதம்மா அவங்க வீடு வசதியா இருக்கா இல்லடா நீங்களும் இங்க வந்துடுங்க என்று சொல்ல பாக்கியா அவன் படம் முடிச்சுட்டு கண்டிப்பா வந்துருவான் என்று சொல்லுகிறார். ஈஸ்வரி அவனே வரேன்னு சொன்னாலும் நீ வரவிடமாட்டா என்று சொல்ல எழில் அம்மா சொல்ற மாதிரி வந்தா தான் பாட்டி எனக்கு சந்தோஷம் என்று சொல்லுகிறார். பிறகு அங்கிருந்து எல்லோரும் கிளம்ப எழில் பாக்யாவிடம் உனக்கு அவங்க இங்க இருக்கிறது ஏதோ பிரச்சினை இல்லை என்று சொல்ல எனக்கு எதுவும் தோணல டைவர்ஸ் கொடுக்கும்போது இருந்தவர் வேற இப்ப இங்க இருக்கிறவர் வேற நான் எந்த துரோகத்தையும் மறக்கவும் இல்ல மன்னிக்கவும் இல்லை. அவர் இங்க இருக்கறதுனால உங்க அண்ணன் பாட்டி இனியா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க நான் அவங்களோட சந்தோஷத்துக்காக தான் இந்த முடிவெடுத்து இருக்கேன் என்று சொல்லுகிறார் எழில் நீ என்னைக்கும் அவனுடைய சந்தோஷத்தை பத்தி யோசிச்சிருக்க என்று சொல்லுகிறார். சரி உன்னோட ஷூட்டிங் எல்லாம் எப்படி போகுது உன்னோட போட்டோ எதுனா இருந்தா காட்டு என்று சொல்ல ஏழில் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவை காட்ட பாக்யா ரொம்ப சந்தோஷப்பட்டு பார்க்கிறார்.

மறுபக்கம் கோபி ரூமுக்குள் வந்து செந்தில் வந்ததும் எழில் வந்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொல்ல ராதிகா கதவை தாப்பால் போடுகிறார். இதனால் ரொமான்ஸ் பண்ண போறியா ராதிகா என்று கேட்க கடும் கோபத்தில் இருக்கேன் என்று கோபப்படுகிறார். ராதிகா என்ன கேட்கிறார்?கோபி எப்படி சமாளிக்க போகிறார். ராதிகாவின் கேள்விக்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 16-01-2025

baakiyalakshimi serial episode update 16-01-2025