Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெஸ்டாரன்ட் திறக்கப் போகும் பாக்யா, பாய் பிரண்டை பங்க்ஷனுக்கு கூப்பிடும் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshimi serial episode update 17-02-25

கண்ணீருடன் ராதிகா கிளம்ப கோபி ஈஸ்வரியிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கேப்காரரிடம் பேசிக்கொண்டிருக்க பத்து நிமிஷத்துல வந்துருவேன் என்று சொல்லுகிறார் பிறகு கோபி ஏர்போர்ட் தானே நா விடமாட்டேன் ஆனா ப்ரீயா தான் இருக்கேன் ராதிகா என்று சொல்ல இருக்கட்டும் கோபி பரவால்ல என்று ராதிகா சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி கையில் பேக் உடன் வந்து ராதிகாவை கூப்பிட்டு கொடுக்கிறார்.அதில் புடவை இருப்பதை பார்த்து நல்லா இருக்கா என்று கேட்க நல்லா இருக்கு என்று ராதிகா சொல்லிவிட்டு பையை கீழே வைத்து விட்டு ஈஸ்வரி இடம் எனை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்லுகிறார்.

உங்க வாயால நான் நல்லா இருக்கணும்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழ ஈஸ்வரி நீ ரொம்ப நல்லா இருக்கணும் என்று வாழ்த்துகிறார். மயூவ கேட்டதா சொல்லு என்று ஈஸ்வரி சொல்ல கண்டிப்பா சொல்றேன் என சொல்லுகிறார் அதற்கு ஈஸ்வரி மயூவோட வயசுக்கு வந்ததுக்கு நீ என்ன கூப்பிட்ட நானும் வந்தேன் அதே மாதிரி கல்யாணத்துக்கும் கூப்பிடு நான் இருந்தா கண்டிப்பா வருவேன் என்று சொல்லுகிறார். நீங்க கண்டிப்பா இருப்பீங்க நான் கூப்பிடுவேன் மயூவுக்கு கல்யாணத்துக்கு நீங்க வந்து ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்ல பாக்யா கிச்சனிலிருந்து வந்து இதை மயுகிட்ட கொடுத்துடுங்க என்று சொல்லிக் கொடுக்கிறார்.

உடனே ராதிகா பாக்யாவிடம் நீங்க எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கீங்க தேங்க்ஸ் பாக்யா என்று சொல்ல அதற்கு பாக்கியம் நீங்க ஒரு நாள் என்ன அக்கான்னு சொன்னிங்க ஆனா நீங்க அதை எப்படி சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது ஆனால் இன்னைக்கு வரைக்கும் நான் உங்களை தங்கச்சி அதான் பாக்குறேன் இதுக்கு அப்புறமா அப்படிதான் இருப்பேன் மயுக்கு ஒரு நல்ல பெரியம்மாவா நான் இருப்பேன் என்று சொல்ல ராதிகா கண்கலங்குகிறார். பிறகு கேப் வந்தவுடன் போன் வர ராதிகா எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப அனைவரும் வழி அனுப்ப வருகின்ற ஆனால் ராதிகா யாரும் வர வேண்டாம் நானே போகிறேன் என்று சொல்லிவிட ராதிகா கோபியை விட்டு பிரிய மனமில்லாமல் கேபில் ஏறி உட்கார்ந்து செல்ல குடும்பத்தினர் அனைவரும் வெளியில் வந்து நிற்கின்றனர் பிறகு காரில் ராதிகா கண்கலங்கி அழுது கொண்டே செல்கிறார்.

பிறகு கோபியிடம் ஈஸ்வரி பேச வர வேணாமா எல்லாமே முடிஞ்சு போச்சு இதுக்கு மேல எதுவுமே இல்ல பேசறதுக்கு இதுதான் என்னோட வாழ்க்கை நான் வாழ்ந்துட்டு போயிடுறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்கியாவும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் செல்வி எப்படி கெத்தா இந்த வீட்டுக்கு வந்தாங்களோ அதே மாதிரியே கெத்தா போயிட்டாங்க என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அவள் ஏற்கனவே பெங்களூரில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தால்ல என்று சொல்ல பாக்யா ஆமாம் என்று சொல்லுகிறார் இல்ல தனியா இருக்க மாட்டாளா தெரிஞ்சவங்களா இருப்பாங்களா என்று யோசிக்கிறார் பிறகு எனக்கு அவ மேல எந்த கோபமும் கிடையாது அவ இந்த வீட்டுக்கு உன்னோட ஃப்ரண்டா தான் வந்தா அப்போ ஒரு பொம்பள புள்ளைய வெச்சு தனியா வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு அவ மேல எனக்கு பரிதாபம்தான் வந்துச்சு ஆனா கோபியை கல்யாணம் பண்ணப்போ என் பேர பசங்களுக்கு அப்பா இல்லாமல் போயிடுவானோனு மட்டும் தான் நான் பயந்தேன் என்று சொல்லுகிறார்.

அதற்கு பாக்கி அவங்க உங்க பையன ஒன்னும் வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கல ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்று சொல்ல அது எனக்கு புரியவே இல்ல பாக்யா நீ சொன்னது தான் கரெக்ட் நான் எப்பவுமே என் பையனோட சந்தோஷத்தை மட்டும் தான் யோசிச்சிருக்கேன் ஆனா உன்ன பத்தியோ ராதிகாவை பத்தியோ நான் யோசிக்காம விட்டுட்டேன். நீயும் கோபியும் சேர்ந்து வாழும் போது கோபி உன்ன நெறைய இடத்துல மட்டம் தட்டி பேசி இருக்கான் ஆனா நான் அந்த இடத்தில் அவனை இப்படி பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்கணும் அவன் கூட சேர்ந்து நானும் உன்னை மட்டன் தட்டி பேசினது தப்புதான் அன்னைக்கு அப்படி பேசி இருந்தா கோபி உன்ன விட்டு போயிருக்க மாட்டான் என்று சொல்லுகிறார். பிறகு அவனா ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான் அதுலயும் கம்முனு இருந்திருக்கணும் அவள பேசி திட்டி அசிங்கப்படுத்தி கஷ்டப்படுத்தி இருக்கேன் எந்த பையன் சந்தோஷத்துக்காக நான் இப்படி எல்லாம் பண்ணனும் அவனை இன்னிக்கு தனிமரமா நிக்கிறான் என்று கண்கலங்கி அழுகிறார். எனக்கு கோபியை பார்க்கவே பரிதாபமா இருக்கு நா அவனை பத்தி மட்டும் யோசிச்சு முடிவெடுத்ததுனால மத்த யாருக்கும் நிம்மதியே இல்ல என்று சொல்லி அழுதுவிட்டு சென்று விடுகிறார். பிறகு செல்வி உங்க மாமியாரு பேசுறது ஒரு பழமொழி சொல்லுவாங்களே கண்ணு கேட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்னு அது மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் இனியா காதலருடன் காபி ஷாப்பில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க அவர் என்ன ஆச்சு நீங்க ஓகேவா இருக்கியா என்று கேட்கிறார் அதற்கு ராதிகா ஆன்ட்டி வீட்டுக்கு வருவாங்க நினைக்கல அவங்கள நான் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் அவங்க வீட்டுக்கு போனோம் கஷ்டப்படுத்தன அவங்க எங்க வீட்டுக்கு வந்த அப்பயும் மரியாதை இல்லாம பேசி இருக்கேன் என்று வருத்தப்பட அதற்கு அவர் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நடந்திருக்க அவ்வளவுதான் என்று ஆறுதல் சொல்லுகிறார் பிறகு அவரின் முகம் மாறுவதை கவனித்த இனியா என்ன ஆச்சு என்ன விஷயம் எதுக்கு முகம் மாறுது என்று கேட்க என்ன உங்க வீட்ல அக்செப்ட் பண்ணுவாங்களா என்று கேட்கிறார் உனக்கு எதுக்கு தெரியுமா இந்த சந்தேகம் என்று சொல்ல இல்ல உங்க ஃபேமிலியோட பேக்ரவுண்ட் வேற எங்க ஃபேமிலியோட பேக்ரவுண்ட் வேற ஏணி வெச்சா கூட எட்டாது நீங்க ரொம்ப பணக்காரங்க ஆனா நான் அப்படியே ஆப்போசிட் எங்களுக்கு எந்த வசதியும் கிடையாது என்று சொல்லுகிறார்.உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் பிசினஸ் பண்றாங்க உங்க பெரிய அண்ணன் நல்ல பொசிஷன்ல இருக்காரு சின்ன அண்ணன் பேமஸ் டைரக்டரா இருக்காரு என்று சொல்ல அதற்கு இனியா அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ மட்டும் என்ன நீயும் கலெக்டர் தான் ஆக போற கண்டிப்பா நீ கலெக்டராக நீ அதுக்கு ஃபுல் எஃபெக்ட் போட்டுட்டு இருக்க என்று சொல்ல ஒருவேளை நான் கலெக்டராக என்ன பண்றது என்று சொல்ல என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன் நீ தான் எனக்கு முக்கியம். நான் எங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கிடுவேன். நீ எதை பத்தியும் பயப்படாத நாளைக்கு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட் எனகிரேஷன் பங்க்ஷன்க்கு நீ வரணும் கண்டிப்பா வரணும் வேற எதுவும் பேசாத நான் உனக்கு புடிச்ச கலர்ல தான் டிரஸ் போடுவேன் என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தி சிரிக்க வைக்கிறார்.

பிறகு வீட்டுக்கு எழில் வர அவர் என்ன கேட்கிறார்? ஈஸ்வரி என்று சொல்லுகிறார்? அதற்கு பாக்கியவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.