தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் நலம் விசாரிக்க செழியன் குறித்து பேச அவன் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள்.
மறுபக்கம் செழியன் மாலினி வீட்டில் உட்கார்ந்து இருக்க மாலினி நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று சொல்லி என் கூடவே இருங்க என்னை நீ செழியனை இங்கேயே தங்க சம்மதிக்க வைக்கிறார். செழியன் நீயாவது இப்படி சொல்ற எங்க வீட்ல என்ன ஒரு மனுஷனாவே மதிக்க மாட்டாங்க என்று பீல் செய்ய அந்த நேரம் பார்த்து பாக்கியா போன் செய்து எங்க இருக்க இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வரணும் என்று சொல்லி சத்தம் போட செழியன் வந்துவிடுகிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து செழியன் மாலினியிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகிறார். செழியன் வீட்டுக்கு வந்ததும் பாக்கியா நீ என்னமோ தப்பு பண்ற எனக்கு சந்தேகமா இருக்கு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க நான் ஆபீஸ்ல தான்மா இருந்தேன் என்று எதை எதையோ சொல்லி சமாளிக்கிறார். பாக்யா செழியனுக்கு அறிவுரை சொல்ல பிறகு செழியன் பசிக்குது என சொல்ல அவனை சாப்பிட கூட்டி செல்கிறார்.
அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் ராமமூர்த்தி மற்றும் எழில் இருவரிடமும் பாக்யா கோபி போன் செய்து டார்ச்சர் செய்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். யாரா இருந்தாலும் நடு ரோட்டில் நிற்கும் போது கொஞ்சம் பரிதாபப்படுவாங்க ஆனா அவரு நான் மாட்டி தவிக்கணும்னு நினைச்சாரு என சொல்ல அந்த ஆள பத்தி எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத என்று எழில் சொல்ல அவருக்கு நான் பதிலடி கொடுக்கணும் என பாக்கியா முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.