தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகா வீட்டுக்கு வந்து கதவை தட்ட கதவைத் திறந்த ராதிகா அதிர்ச்சியாகி நிற்க கோபி வெளியே வந்து இடியட் வீடு மாறி வந்துட்டியா என கேள்வி கேட்க வீட்டுக்குள் வந்த பாக்கியா என் வீட்டு சாவியை கொடுங்க என்று கேட்கிறார்.
கோபிக்கு அடுத்தடுத்து பாக்யா பதிலடி கொடுக்க குறுக்கே பேசிய ராதிகாவை சத்தம் போட்டு அடக்குகிறார் பாக்கியா. பணத்தை வாங்கிட்டு வீட்டை விட்ட பிறகு என் வீட்டு சாவி எதுக்கு இவர்கிட்ட இருக்கணும் வாங்கி கொடுங்க என்று ராதிகாவிடம் ஆவேசப்படுகிறார்.
கோபி அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்ல பாக்கியா நீங்க கொடுத்து தான் ஆகணும் இல்லனா போலீஸ் ஸ்டேஷன் போவேன் என மிரட்டுகிறார். உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ என கோபி சவால் விடுகிறார்.
ராதிகா தேவையில்லாத பிரச்சனை எதுக்கு? சாவி எங்கே என கேட்டு அதை எடுத்து கொடுக்க பாக்கியா வெளியே வருகிறார். பிறகு இருவரும் காட்டில் செல்லும் போது சந்தித்துக் கொள்ள பாக்யா கண்டுகொள்ளாமல் செல்ல கோபி பின் தொடர்ந்து வர அவர்களை பார்த்து இருவர்கள் என்ன ஜோடியாக வாக்கிங் வந்திருக்கீங்க என்று கேட்கிறார். உங்களுக்கு விஷயம் தெரியாதா நான் இவளை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டேன் என கோபி சொல்கிறார்.
பிறகு பாக்யா நீங்க ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க மசாலா பொடி வேணுமா வீட்டுக்கு வந்து வாங்கிக்கோங்க என்று சொல்ல வீடு எங்க இருக்கு என்று கேட்க அதே வீடு தான் பேரு பாக்கியலட்சுமி இல்லம்னு போட்டு இருக்கும். விவாகரத்து பண்ணதுனால ஜீவனாம்சம் வந்ததுன்னு நினைக்காதீங்க நாங்க பணம் கொடுத்து வாங்கி இருக்கோம் என்று சொல்லி கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அவமானப்பட்டு நிற்கும் கோபி இனிமே நீ ரொம்ப கஷ்டப்படுவ பழைய இடத்துக்கு திரும்ப வருவேன் ஐயோ நம்ம இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கவலைப்படுவ என்று சொல்ல பாக்கியா துரோகம் பண்ணவங்க, வீடு புகுந்து லைசென்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்போது நான் ஏன் கஷ்டப்பட போறேன் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறார்.
அடுத்து கணேஷ் அமிர்தாவின் அம்மா வீட்டுக்கு சென்று கதவைத் தட்ட அவர் கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அமிர்தா குறித்து விசாரித்து போன் நம்பர் குடுங்க என்று கேட்க அவர் கொஞ்சம் வெளிய வாங்க போன் நம்பர் எடுத்து தரேன் என்று சொல்லி வெளியே தள்ளி கதவை சாத்தி விடுகிறார். இதனால் கணேஷ் என் அமிர்தா நம்பரை யாரும் கொடுக்க மாட்டீங்க என அழுதபடி அங்கிருந்து கிளம்புகிறார்.
கேன்டினில் ராதிகா இனிமே நீங்க எங்கேயும் வெளியே போகக்கூடாது என்று பாக்யாவுக்கு ஆர்டர் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
