தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிற பாக்கியா அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து நியூஸ் சேனல் வைக்க அதில் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை எனவும் அரசு நடத்த இருந்த பொருட்காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாக எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
உடனே கோபி மற்றும் ஈஸ்வரி என இருவரும் ரவுண்டு கட்டி பாக்கியாவை தீட்டி தீர்க்க எழில் நீங்க பண்ணாதய்யா எங்க அம்மா பண்ணிட்டாங்க என கேள்வி கேட்க நான் என்னடா பண்ணி என்ன கோபி சத்தம் போட ராதிகா அவங்க விஷயத்துல நீங்க தலையிடாதீங்க என ரூமுக்குள் அழைத்துச் செல்கிறார்.
அதைத்தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தா இருவரும் பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்று பொருட்கள் எப்படி இருக்கிறது என பார்க்க கிளம்புகின்றனர். செல்வி மளிகை சாமான்களை தற்போது அனுப்ப வேண்டாம் என செல்வதற்காக சூப்பர் மார்க்கெட் சொல்கிறார்.
ராமமூர்த்தி ஈஸ்வரி உறவினர் வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். செழியன் ஹாலில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது பழனிச்சாமி வீட்டுக்கு வருகிறார். செழியனை நலம் விசாரித்துவிட்டு பழனிசாமி பேசிக் கொண்டிருக்க பாக்யாவும் அங்கு வந்து அவரிடம் பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து செழியன் ஆபீஸ் கால் வந்து விட ரூமுக்கு எழுந்து செல்ல பழனிச்சாமியும் பாக்கியாவும் பேசிக் கொண்டிருக்கும் நேரம் கோபி வீட்டிற்கு வருகிறார். அம்மா அம்மா என ஈஸ்வரியை கூப்பிட பாக்கியா அத்தை வீட்டில் இல்ல என கூறுகிறார்.
எல்லோரும் வெளியே சென்றிருப்பதாக அறிந்து கொள்ளும் கோபி யாரு இல்லாத நேரமா உங்க சாரை வீட்டுக்கு வர வச்சு லூட்டி அடிச்சுட்டு இருக்கியா என அவமானப்படுத்தி பேசி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.