விஜய் டிவியில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி எழிலை வந்து சந்தித்து வீட்டுக்கு போகுமாறு சொல்லுகிறார். ஆனால் எழில் எனக்கு தெரியும் நீங்க வேலைய பாருங்க என்று சொல்லி விடுகிறார். ஆனால் கோபி பாக்கியாவை திட்ட அம்மா எது பண்ணாலும் சரியாக இருக்கும் என்று எழில் சொல்லுகிறார்.
கோபி செலவுக்கு பணம் கொடுக்க வாங்க மறுக்கிறார் எழில். மறுபக்கம் குடும்பத்தில் அனைவரும் சோகமாக இருக்க, ஜெனி ,செழியன் மற்றும் இனியாவிற்கு ஆறுதல் சொல்லுகிறார் பாக்யா. பிறகு தாத்தாவின் பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகிறது என்றும் என்பதாவது பிறந்த நாள் பெருசா கொண்டாடனும் என்றும் பேசிக் கொள்கின்றன. எழில் வருவாரா என்று கேட்க கண்டிப்பாக வருவான் என்று பாக்யா சொல்லுகிறார்.
எழிலின் ரூமுக்கு சென்று எழில்,நிலா பாப்பா என அனைவரையும் நினைத்து அழுகிறார் பாக்யா. பிறகு போன் போட்டு பேசலாம் என்ற முடிவை எடுத்து அமிர்தாவிற்கு போன் செய்கிறார். மறுபக்கம் கோபி சோகமாக வீட்டுக்கு வருகிறார்.
பாக்யா அமிர்தாவிடம் என்ன பேசினார்? அமிர்தாவின் கேள்விக்கு பாக்யாவின் பதில் என்ன? ராதிகாவிடம் கோபி என்ன சொல்லுகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.