தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கான்ஸ்டபிள் பாண்டியன் அமிர்தாவிடம் உனக்கு கணேஷோட போக விருப்பமா என்று கேள்வி கேட்க அவர் இல்லை என்று சொல்ல கணேஷ் அதிர்ச்சி அடைகிறார்.
கணேஷ் என்ன அமிர்தா சொல்ற நான் உன்னுடைய கணேஷ் என்று நெருங்கி வர குறுக்கே எழில் வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். நடந்த விஷயங்கள் மொத்தத்தையும் கேட்ட கான்ஸ்டபிள் பாண்டியன் கணேஷ் இனிமேல் அமிர்தா வாழ்க்கையில் வரக்கூடாது என கூறுகிறார். நீங்களா என்ன சார் போலீஸ் என்று கணேஷ் கோபப்பட என்கிட்டையே நீ இவ்வளவு மிரட்டு மிரட்டுனா இவங்கள எவ்வளவு மிரட்டி இருப்ப என்று கேள்வி கேட்டு ஷாக் அடிக்கிறார்.
கான்ஸ்டபிள் தன்னுடைய நம்பரை கொடுத்து இனிமே இந்த கணேஷ் அமிர்தா வாழ்க்கையில வரமாட்டான். அவனுக்கும் அமிர்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம நான் ஒரு லெட்டர்ல கையெழுத்து வாங்கிக்கிறேன். திரும்பவும் ஏதாவது பிரச்சனை பண்ணா எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லி கணேஷை அழைத்துச் செல்கிறார்.
அடுத்ததாக ஆபீஸில் இருக்கும் கோபி தன்னுடைய நண்பர் சதீஷை கூப்பிட்டு இன்னையோட இந்த கம்பெனியை இழுத்து மூட போறேன் என்று கண் கலங்கி அழுகிறார். தன்னுடைய பெயருடன் செழியன், எழில், இனியா ஆகியோரின் இனிசியலை வைத்து உருவாக்கிய கம்பெனி இது, ஆனா இன்னிக்கு யாருமே என்கிட்ட கிளைண்ட்டா இல்லை. எல்லாமே போயிடுச்சு. கம்பெனியை மூடுறதை தவிர வேற வழியே இல்லை என கலங்கி நிற்கிறார்.
மறுபக்கம் பாக்யா மற்றும் செல்வி இருவரும் பிரச்சினையை பற்றி பேசி வருத்தப்பட்டு கொண்டு இருக்க அங்கு வரும் எழில் ரெஸ்டாரண்ட் வாடகைக்கு எடுப்பது பற்றி இன்னைக்கு அட்வான்ஸ் கொடுக்க வர சொல்லி இருக்காரு நாம போயிட்டு வந்துடலாம் என்று கூப்பிட பாக்கியா இப்போதைக்கு இது தேவையா என்று யோசிக்க ராமமூர்த்தி வீடுனா பிரச்சனை இருக்கத்தான் செய்யும், போயிட்டு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடலாம் என்று சொல்ல பாக்கியாவும் மனதை தேற்றிக்கொண்டு கிளம்பி செல்கிறார்.
அடுத்து கோபி ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு அவர்களுக்கு நன்றி கூறி இன்றுடன் கம்பெனியை இழுத்து மூட போறேன் என்று சொல்ல அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லோரும் திடீர்னு சொன்னா எப்படி எங்களுக்கு ரெண்டு மாசம் சம்பளம் பாக்கி இருக்கு என்று கூறுகின்றனர். கோபி ஒரு மாதத்தில் உங்களுடைய சம்பள பாக்கி அனைத்தையும் கொடுத்து விடுவேன் என்று டைம் கேட்கிறார். அதன் பிறகு ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லோரும் கிளம்பிச் செல்கின்றனர்.
சதீஷ் நீ வீட்டுக்கு போ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று சொல்ல கோபி அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொன்னா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க அவங்களால தாங்கிக்கவே முடியாது, ராதிகாவும் பயங்கர ஷாக் ஆகிடுவா என்று கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.