Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த கதிர், ராஜி.. இரண்டு குடும்பத்திற்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களின் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கோமதி அம்மாவை பார்க்க வடிவு ஆகியோர் எங்க நிலைமை பார்த்தியா எங்க வீட்டு பொண்ணு எங்க போனான்னு தெரியல லெட்டர் ஏதாவது எழுதி வச்சிட்டு போயிருந்தா கூட யாரோ ஒருத்தன் கூட சந்தோஷமா இருக்கான்னு நினைச்சிருப்போம் ஆனால் தடயமே இல்லாம போயிருக்கா என்று கலங்க இன்னும் கதிர் ராஜி கல்யாணம் ஆன கோலத்துல வந்து நின்னா என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே முருகா நீ தான் துணை இருக்கணும் என கோமதி மனதுக்குள் வேண்டுகிறார்.

மறுபக்கம் ராதிகா கோபி இனியா ஆகியோர் ஊருக்கு கிளம்பி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கின்றனர். பிறகு அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். எதிர் வீட்டில் கோமதி மீனா பதற்றத்தில் இருக்க சரவணன், செந்தில் கடையிலிருந்து வந்திருக்க பாண்டியனும் வீட்டுக்கு வந்து விட இவர்கள் உச்சகட்ட பதட்டம் அடைகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் கார் ஒன்று வந்து நிற்க முதலில் காரில் இருந்து எழில் இறங்கி வர எழிலை பார்த்து கோபி ஷாக் ஆகிறார். அடுத்து பாக்யாவும் காரில் இருந்து இறங்க இதை பார்த்த இனியா அம்மா என ஓடி சென்று விடுகிறார். பிறகு ராஜி கழுத்தில் தாலியுடன் இறங்குகிறார்.

முதலில் ராசியை பார்த்ததும் எல்லோரும் ஓடிவர பாட்டி கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். எல்லோரும் யாரடி உன்னை கூட்டிட்டு போனது என்று கேட்டு சத்தம் போட சக்திவேலின் மகன் எவன்டா அவன் வெளியே வாடா என்று காரை நோக்கி ஓட எழில் கொஞ்சம் பொறுமையா இருங்க நானே கூட்டிட்டு வரேன் என்று சொல்லி கதிரை கீழே இறக்கி கூட்டி வர எல்லோரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.

வந்தா ஏமாற்றி கூட்டிட்டு போய் இருப்பான் என்று கதிரை அடிக்க பாய ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க என்று சொல்லி திருச்செந்தூரில் இவங்கள பார்த்தேன். ஏற்கனவே கதிர் கோமதி மீனாவ பார்த்தேன் அவங்களும் எங்க கூட நல்லா பழகுனாங்க இன்னைக்கு காலையில ஊருக்கு கிளம்பிட்டாங்க நாங்களும் ஊருக்கு கிளம்பி தயாராக இருக்கும்போது கதிரை இந்த பொண்ணோட பார்த்தேன்.

இந்த பொண்ணுக்கு இந்த கல்யாணம் பிடிக்காம வந்ததும் ரெண்டு பேரும் காதலிப்பதால் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு தெரிய வந்தது வீட்டுக்குப் போக பயந்துட்டு இருந்ததுனால கூட்டிட்டு வந்தோம் என சொல்கின்றனர். கோமதி ஓட பையன் அண்ணன் பொண்ணுங்க அதனால அப்படியே விட்டுட்டு பார்க்க மனசு இல்லை அதனாலதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம் என்று சொல்ல அதை நம்ப மறுக்கின்றனர்.

கதிர் அவள கடத்திட்டு போய் தான் கல்யாணம் பண்ணி இருப்பான் என்று படிக்க பாய செந்தில் சரவணன் ஆகியோர் கதிரை காப்பாற்ற ஓடி வருகின்றனர். இப்படி இரண்டு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் பாண்டியன் என்னடி இந்த ட்ராமாவுக்கு நீயும் உடந்தையா என்று கேட்க எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார்.

சக்திவேல் இது எல்லாம் ப்ளான் போட்டு தான் பண்ணி இருக்காங்க அன்னைக்கு அவன் வீட்டு பையன் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தப்ப கைகட்டி நின்னு சிரிச்சதனால இன்னைக்கு இந்த பாண்டியன் திட்டம் போட்டு தான் இப்படி செய்ய வச்சிருக்கான். எல்லாத்தையும் பண்ணிட்டு நல்ல ஒரு வேஷம் போட்டு நம்ம கூட சேர்ந்து உன்னை தேடி இருக்கான் என்று சொல்கிறார்.

கதிர் இதுக்கும் என் குடும்பத்துக்கும் என் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்கிறார். அப்படின்னா நீ தான் இதெல்லாம் பண்ணியா உன்னை உயிரோட விடமாட்டேன் என்று சக்திவேல் வீட்டிற்குள் அருவா எடுத்து வர செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update