தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு கோபி குடித்துவிட்டு கார் ஓட்டி வந்ததாக அவருடைய நண்பர் செந்தில் சொன்னதால் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எழில் இரவு நேரத்தில் எதுக்கு வெளிய வந்து நின்னுட்டு இருக்க என கேட்க அப்பா இன்னும் வரல என கூறுகிறார். அவர் வருவாரு இப்படி லேட்டா வருவது என்ன புதுசா என பாக்கியாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்.
ஒரு பக்கம் பாக்கியா பதற்றத்தோடு இருக்க இன்னொரு பக்கம் கோபி கொடுத்த அதிர்ச்சியால் உறைந்து போயுள்ளார் ராதிகா. இந்த நேரத்தில் கோபி குடித்துவிட்டு வீட்டுக்கு தள்ளாடிக் கொண்டு வந்ததைப் பார்த்த பாக்கியா அதிர்ச்சி அடைந்து அவரை பிடித்து வீட்டிற்குள் கூட்டி வருகிறார். பிறகு எழில் மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து கோபியை ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைக்கின்றனர்.
ரூமுக்குள் கோபி பாக்கியாவிடம் உன்னை எனக்கு சுத்தமா புடிக்கவே புடிக்காது. உன்னை பிடிக்காமல்தான் உன் கழுத்தில் தாலியை கட்டினேன் என கூறுகிறார். பிறகு போதையில் என்ன விட்டு போய்விடாதீர்கள்? நீங்க ரெண்டு பேரும் தான் என்னுடைய உலகம் உங்களுக்காக என் மொத்த குடும்பத்தையும் தூக்கி போட்டுட்டு வரேன் என்று சொல்லி இருந்தேன். என்ன புரிஞ்சிக்கோங்க நீங்க இல்லாம என்னால உயிரோடு வாழ முடியாது என புலம்புகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியா கதறி அழுகிறார்.
மறுநாள் காலையில் கோபி பேசியதை நினைத்து பாக்கியா வருத்தத்தில் இருக்க அந்த நேரத்தில் எழில் வந்து அப்பா ஏதாவது சொன்னாரா ஏன் இப்படி குடிச்சுட்டு வந்தாரு? யார் கிட்ட போய் கேட்பது என பாக்கியா வருத்தப்படுகிறார். பிறகு எழில் வெளியே கிளம்பியது செல்வியிடம் அவர் இப்படி குடிச்சது கிடையாது. உன்னை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என எத்தனை முறை சொன்னார் தெரியுமா. அதுமட்டுமல்ல நீங்க ரெண்டு பேர்தான் எனக்கு ரொம்ப முக்கியம் என கூறுகிறார்.
இதைக் கேட்ட செல்வி சாருக்கு ஒரு பொம்பளையோட தான் தொடர்பு இருக்குன்னு தெரியும் இது என்ன ரெண்டு பேரு, ரொம்ப பாவம் நீ என சொல்ல அப்படி எல்லாம் சொல்லாத செல்வி என்னால தாங்க முடியாது என கூற அதுக்குன்னு சார சந்தேகபடாமல் இருக்க முடியுமா என கூறுகிறார்? இதைக் கேட்ட பாக்கியா இன்னும் குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.