Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெனி அப்பா சொன்ன வார்த்தை,கோபத்தில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியை கண்ணாடி வழியாக பார்த்தபடி காரை ஓட்டி வர திடீரென குழந்தை அழுக காரை ஓரம் கட்டி விட்டு என்னாச்சு என பதறுகிறார். ஒன்னும் இல்ல கார் எடுங்க என்னை ஜெனி சொல்ல செழியன் உன்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணும் என கூறுகிறார்.

நீங்க எதுவும் பேச வேண்டாம் காரை எடுங்க என ஜெனி சொல்ல என்னை வாங்க போங்கன்னு சொல்ற என்று கேட்க இப்ப நீங்க கார் எடுக்க போறீங்களா இல்ல நான் காரை விட்டு இறங்கவா என்று கேட்க நான் எதுவும் பேசல என்று செழியன் அமைதியாகி விடுகிறார்.

ஜோசப் ஜெனி இன்னும் வராததால் பதற்றத்தில் இருக்க செழியன் ஜெனியை ட்ராப் செய்வதை பார்த்து கடுப்பாகிறார். செழியன் சட்டையை பிடித்து நீ எதுக்குடா இங்க வந்த என்று கோபப்படுகிறார். ஜெனி மற்றும் மரியம் இருவரும் அவரை வீட்டிற்குள் அழைத்து வருகின்றனர்.

நீ எதுக்கு ஜெனி அவனோட வந்த வரும்போது என்ன பேசிட்டு வந்தீங்க என்று கோபப்படுகிறார். கூடிய சீக்கிரம் உனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து வேறொரு கல்யாணம் பண்ணனும் என ஜோசப் சொன்ன ஜெனி இன்னொரு கல்யாணமா? யாருக்கு என கேட்க உனக்கு தான் என்று சொல்ல அதெல்லாம் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது அதை பத்தி பேசாதீங்க என ஜோசப்க்கு பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக கோபி செந்திலை சந்தித்து சாரி சொல்ல அவன் உன்னை நம்பினதுக்கு நீ நல்லா பண்ணிட்ட உன்ன போய் நம்பனும் பாரு எனவே கோபப்படுகிறார். என் வாழ்க்கையில இனிமே உன்ன எப்பவுமே நம்ப மாட்டேன் என்று திட்டி அங்கிருந்து செல்ல கோபி பிளான் எல்லாம் நாசமா போச்சு என டென்ஷன் ஆகிறார்.

இங்கே இனியா ராதிகாவுக்கு ரெஸ்டாரன்ட் ஓப்பனிங் போட்டோக்களை காட்டிக் கொண்டிருக்கும் குரூப் போட்டோவில் கோபி இருப்பதை பார்த்து பயங்கர ஷாக் ஆகிறார். இந்த போட்டோவை எல்லாம் எனக்கு கொஞ்சம் அனுப்பி வை என சொல்கிறார்.

அடுத்து பாக்யா வீட்டுக்கு வந்து ரெஸ்டாரன்ட் இன்னும் குளோஸ் பண்ணல பத்தரை மணி ஆகும் நீங்க பாத்துக்கோங்கன்னு சொல்லி நான் வந்துட்டேன், அங்க நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்றேன் தூங்கிடாதீங்க என உள்ளே செல்கிறார். பாக்யாவின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்ததாக கோபி இன்னைக்கு என்ன ராதிகா பளபளனு இருக்க அப்படி பப்பாளி பழம் மாதிரி உன் முகம் மின்னுது பியூட்டி பார்லர் போயிட்டு வந்தியா என கோபி ஐஸ் வைக்க இனிய ரெஸ்டாரன்ட் ஓப்பனிங் போட்டோ எல்லாம் காட்டுங்க நீங்க பாக்கறீங்களா என்று சொல்லி ஒவ்வொரு போட்டோவாக காட்டுகிறார். கோபி எல்லாத்துக்கும் இது நல்லா இல்ல அது நல்லா இல்ல கமெண்ட் அடிக்க குரூப் போட்டோ ஒன்னு காட்டுனா அதுல இருக்க எல்லாரையும் எனக்கு தெரியுது ஒருத்தர் மட்டும் தெரியல அது யாருன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க என்று போட்டோவை காட்ட கோபி குரூப் போட்டோவில் தன் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

நான் ரெஸ்டாரன்ட் போகல இனியா என்னை மிஸ் பண்ணுவா அதனால அதை கிராப் பண்ணி வச்சிருக்கலாம் என்று பொய் சொல்லி சமாளிக்க ராதிகா கோபப்படுகிறார். ராதிகா உங்களை இப்படித்தான் கல்யாணம் பண்ணிட்டு தெரியல என்று கோபப்பட வெளியிலிருந்து இனியா இவர்கள் சண்டையை கேட்டு விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update