தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனியின் அம்மா குழந்தை ரொம்ப நாளா எங்க வீட்ல இருந்ததுனால அனுப்ப எனக்கு கஷ்டமா இருக்கு என்று கண்கலங்க பாக்கியா ஜெனிய பத்திரமா பாத்துக்குறேன் என சொல்கிறார்.
செழியனும் இனிமே எந்த தப்பும் நடக்காது. நான் நல்லபடியா பாத்துக்குறேன் என வாக்கு கொடுத்து அங்கிருந்து கிளம்ப ஜோசப் ஜன்னல் வழியாக பார்த்து கண்கலங்கி நிற்கிறார். அதன் பிறகு இவர்கள் வீட்டுக்கு வர செழியன் ஜெனியை காரிலேயே இருக்க சென்று விட்டு ஈஸ்வரி பாக்யா எங்க போயிட்டு வரேன் என்று கேட்க கொஞ்ச நேரத்துல சொல்றேன் அத்தை என்று சொல்ல இப்பவே சொல்லு என சொல்லிக் கொண்டே இருக்க பாக்கியா கிச்சனுக்கு சென்று ஆரத்தி கரைச்சு வருகிறார்.
அதற்குள் எல்லோரும் ஆளுக்கு வந்து விட எல்லாம் இங்கதான் இருக்கீங்களா நல்லதா போச்சு என்று அனைவரையும் வெளியே அழைத்துச் செல்ல செழியன் முதலில் காரிலிருந்து வெளியே வர பிறகு ஜெனியையும் குழந்தையையும் கூட்டி வர எல்லோரும் ஷாக் ஆகி நிற்க இனியா சந்தோஷப்படுகிறார்.
பிறகு செழியன் ஜெனிக்கு ஆரத்தி எடுக்க போக ராமமூர்த்தி ஆர்த்தி எடுக்கிறனா ஜெனி என்று கேள்வி கேட்க ஆமாம் மாமா ஜெனி திரும்பி வந்துட்டா என்று சொன்னது எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல கோபி ஜெனிமா எடுத்தது நல்ல முடிவு ஆனா திடீர்னு இந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கேட்க செழியன் எல்லாத்துக்கும் காரணம் அம்மா தான் என்று சொன்னதும் கோபியின் முகம் மாறுகிறது. இருந்தாலும் நல்லது என சந்தோஷப்படுகிறார்.
ராதிகா உங்களுக்குள்ள பேசி பிரச்சனையை தீர்த்துக்கிட்டிங்களா என்று கேட்க செழியன் ஆமாம் என்று சொல்ல குட் நல்லது என சந்தோஷப்படுகிறார். பிறகு ஜெனி ஈஸ்வரி அமைதியாகவே இருக்க அவரிடம் சென்று நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா என்று கேட்க நீ பாட்டுக்கு குழந்தை தூக்கிட்டு போயிட்டு நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று கண் கலங்க செழியன் அதான் ஜெனி வந்துட்டாலே பாட்டு என்று சொன்னதும் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று போய் சோபாவில் உட்கார்ந்து கொஞ்சுகிறார்.
குழந்தைக்கு பால் எல்லாம் ஒழுங்கா தரையா என்று கேட்டுக் கொண்டிருக்க ஜெனி உங்களுக்கு என் மேல ரொம்ப தான் அக்கறை என்று கேட்க ஈஸ்வரி ஏன் இல்லையா என்று திருப்பி கேட்க அக்கறை இருந்ததால் தான் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண பார்த்தீங்களா என கேட்டு ஷாக் கொடுக்கிறார். நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போகலையா என்று கேட்க நான் கண்டிப்பா பண்ணி இருக்க மாட்டேன் என்று சொல்ல செழியன் நானும் பண்ணி இருக்க மாட்டேன் என சொல்கிறார்.
எனில் கோபியையும் கோர்ட்டு விட கோபி அந்த கதை இப்ப ரொம்ப அவசியமா என்று கேட்கிறார். எல்லோரும் சந்தோஷமாக இருப்பதோடு இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.