Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழிலிடம் கோபப்பட்ட ஈஸ்வரி, வாந்தி எடுக்கும் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் குழந்தையைப் பற்றி பேசாதீங்க என்று ஈஸ்வரிக்கு செல்ல நீங்க குழந்தை பெத்துக்கிற வரைக்கும் நான் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் என்று சொல்கிறார்.

குழந்தை பெத்துக்க வேண்டிய விஷயத்தில முடிவெடுக்க வேண்டியது நான் நான் இன்னும் செட்டில் ஆக வேண்டி இருக்கு என்று சொல்ல ஈஸ்வரி அதான் ஒரு படம் பண்ணிட்டயே, சின்ன வயசுல குழந்தை பெத்துக்கணும் இல்லனா அதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்க முடியாது என்று சொல்கிறார். பெரியவங்க நாங்க சொல்றத மட்டும் நீ கேட்டா போதும் எனக்கு இந்த வீட்ல கூடிய சீக்கிரம் வாந்தி எடுக்கிற சத்தம் கேட்கணும் என்று கோபப்படுகிறார்.

உடனே ராதிகா வாந்தி எடுக்கிறார். கோபி என்ன ஆச்சு என்று கேட்க தெரியல என்று சொல்ல ரெஸ்டாரன்ட் சாப்பிட்டது எதுவும் ஒத்துக்காமல் போயிடுச்சோ என பலவிதமாக யோசிக்கிறார்.

அடுத்ததாக எழில், செழியன் ஹாலில் இருந்து பேசிக் கொண்டிருக்க பாக்கியா தூங்க போக சொல்ல செழியன் ரூமுக்கு போகவே பயமா இருக்கு என்று சொல்கிறார். ஜெனி நடந்து கொள்வதை பற்றி சொல்கிறார். நீ திரும்பவும் தப்பு பண்ண மாட்டேன் என்ற நம்பிக்கை வர வரைக்கும் ஜெனி இப்படித்தான் இருப்பார் நீதான் அவனுக்கு நம்பிக்கையை கொடுக்கணும் என்று சொல்கிறார்.

பிறகு ராதிகா நைட்டெல்லம் வாந்தி எடுக்க மறுநாள் காலையில் கோபி எம்பி மெடிக்கல் ஷாப் போகணும் என சொல்ல கோபி ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்ல ராதிகா முதலில் மெடிக்கல் ஷாப் போகலாம் என்று கூறுகிறார். பிறகு இருவரும் மெடிக்கல் ஷாப் கிளம்பி வர கோபி ஈஸ்வரியிடம் ராதிகா வாந்தி எடுக்கும் விஷயத்தை சொல்கிறார். மெடிக்கல் ஷாப் போயிட்டு வந்துடறோம் என்று சொல்லி கிளம்பி வருகின்றனர்.

ஆனா எல்லாம் மெடிக்கல் ஷாப் மூடி இருக்க ராதிகா கடுப்பாகி கோபியை திட்டுகிறார். திறந்திருக்க மெடிக்கல் ஷாப்புக்கு போங்க என்று சொல்கிறார். அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ராதிகா கர்ப்பம் என்பது கன்ஃபார்மாக கோபியிடம் சொல்ல முதலில் சந்தோஷப்படும் கோபி பிறகு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi Serial episode update
Baakiyalakshimi Serial episode update