தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க அவர் எதுவும் தெரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கிறார். அப்பா தப்பு பண்ணி இருக்காரு அது எனக்கு ஏற்கனவே தெரியும் இத வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள்ளவே போட்டு குழம்பிக்கிட்டு இருந்தேன் என கூறுகிறார்.
அதேபோல் கோபியின் அப்பா இவன் வேற ஒரு பொண்ணு பின்னாடி போய் ரொம்ப நாள் ஆச்சு என சொல்ல இதைக் கேட்ட ஈஸ்வரி இல்ல நான் நம்ப மாட்டேன் கோபி அப்படிப்பட்ட ஆள் கிடையாது என சொல்ல பாருங்க இப்பவும் அத்தை உங்கள நம்பிகிட்டு தான் இருக்காங்க. உங்களுக்கு என்ன தேவை யோசிச்சு யோசிச்சு பண்ணுங்க எங்க எல்லாரும் எதுக்கு இப்படி நடிச்சு ஏமாத்துனீங்க சொல்லுங்க என்ன பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
ஹாஸ்பிடல் என்னதான் நடந்துச்சு என ஈஸ்வரி கேட்க எனக்கு முன்னாடியே இவர் வேற ஒருத்தர் போன் பண்ணி வர வச்சிருந்தாரு அவங்க தான் இவருடைய மனைவினு கூடவே இருந்தாங்க. நர்ஸ் என்கிட்ட வந்து அவங்க வைஃப் உள்ள இருக்கும்போது நீங்க யாருன்னு கேட்டாங்க. இவர் அவங்க கைய புடிச்சுகிட்டு என்ன விட்டு போயிடாத என கெஞ்சிட்டு இருந்தாரு. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும் நான் அதுக்கு அப்புறம் இதுல எந்த உரிமையில் போய் பார்க்கிறது நான் எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்று எனக்கு தெரியல.
இன்னும் அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்படி தாங்கிக்க போறீங்கன்னு தெரியல என சொல்ல யார் அவன் கேட்க பாக்யா கோபியிடம் நீங்க சொல்றீங்களா நான் சொல்லவா என கேட்க கோபி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா என கூற இன்னமும் இப்படி நடிக்கிறதுக்கு உங்களுக்கு வெக்கமாக இல்லையா என திட்டி தீர்க்கிறார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த அவர்கள் வேறு யாரும் இல்லை ராதிகா தான் என சொல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைய கோபி திகைத்துப் போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.