Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியின் நாடகங்களை உடைத்த பாக்யா.. கோபிக்கு காத்திருக்கும் ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபியை நிற்க வைத்து பாக்கியா இதுவரை அவர் என்னவெல்லாம் நாடகம் போட்டு இருக்கார் எப்படி எல்லாம் இந்த குடும்பத்தை ஏமாற்றி இருக்கிறார் என ஒவ்வொரு விஷயமாக கூறுகிறார்.

முதலில் அந்த அவங்க வேற யாரும் இல்ல ராதிகா தான் என சொல்ல குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ராதிகாவை யாருமே தெரியாதுன்னு இவர் போட்ட நாடகத்தையும் நாம நம்மி கிட்டு தான் இருந்தோம். அவங்க வரும்போது எல்லாம் எதையாவது காரணத்தை சொல்லி எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்வது, நாம எல்லோரும் குன்னக்குடி போயிருக்கும் போது வேலை விஷயமா வெளியே போகிறதா சொல்லிட்டு ராதிகா கூடத்தான் ஹோட்டல்ல இருந்திருக்காரு. ஒரே ஹோட்டலில் இருப்பதால் ராதிகாவை பார்க்கலாம் என்று சொன்னபோது இவர் முகத்தில் வந்த பதற்றத்திற்கு அப்போ காரணம் தெரியல இப்போது தான் புரியுது என கூறுகிறார்.

ராதிகா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னபோது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன் உங்களுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். கடவுள் கூட என்னை பார்த்து சிரிச்சிருப்பாரு. அவங்க கல்யாணம் பண்ணிட்டு இருந்தது இவரைத்தான் என எனக்கு தெரியாம போச்சு.

கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி கேட்கிற கேள்விக்கு சரியென மட்டும் பதில் சொல்லுன்னு சொன்னாரு, கோர்ட்ல எல்லாரும் விவாகரத்து கேட்டு வந்திருந்தாங்க ஆனா அப்ப கூட இவர் மேல சந்தேகம் படாமல் ஜட்ஜ் அம்மா முன்னாடி நின்னு சரி என்று சொல்லிட்டு வந்தேன். ஆனா 25 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவாகரத்து வாங்கத்தான் அங்க போயிருக்கோம் என்று எனக்கு இப்பதான் புரியுது. அந்த ராதிகா தான் எல்லாத்துக்கும் காரணம் கோபியோட மனசையும் மாற்றி இருப்பார் என ஈஸ்வரி சொல்ல எனக்கு ராதிகா சொன்னது நல்லா ஞாபகம் இருக்கு இவர் குடும்பத்தை பத்தி அங்க தப்பு தப்பா சொல்லி இருக்காரு. அவர் நிறைய பொய் சொல்லிட்டார்னு சொன்னாங்க. அதுவும் இல்லாம அவங்களை நிக்க வச்சு நான் எப்படி கேள்வி கேட்க முடியும் எனக்கென்ன உரிமை இருக்கு. இவரை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இவரைத்தான் கேள்வி கேட்க முடியும் என கூறி கேள்வி கேட்கிறார்.

ஈஸ்வரி கோபியை பிடித்து அப்படிலாம் இல்லன்னு சொல்லுடா என சொல்ல அந்த நேரத்தில் போஸ்ட் மேன் கோபிநாத் பெயருக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருப்பதாக கூறுகிறார். செழியன் வாங்க போக கோபிநாத் தான் கொடுப்பேன் என போஸ்ட்மேன் கூட பிறகு கோபி சென்று கையெழுத்து போட்டு அதை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update