Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழனிசாமி செய்த வேலை, மகிழ்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியுடன் வீட்டுக்கு வர அதை பார்த்து கமலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

கமலா என்ன மாப்ள உங்க அம்மாவ திரும்ப கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று மறைமுகமாக கேட்க கோபி எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க உங்களுக்கு பிடிக்குதோ புடிக்கலையோ அவங்க இங்கதான் இருப்பாங்க அவங்க என்னுடைய அம்மா நான் தான் அவங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார்.

அப்படியே மறுபக்கம் பாக்கியா வீட்டில் ராமமூர்த்தி பாக்கியா, ராமமூர்த்தி எல்லோரும் ஒரு மாதிரி இருக்க எழில் ஏம்மா என்ன ஆச்சு ஏன் டல்லாவே இருக்கீங்க, தாத்தாவும் அப்படித்தான் இருக்காரு என்று கேட்க பாட்டியை பத்தி தான் கவலையா இருக்கு. போய் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள உங்களுக்கு இரண்டு முறை லோ சுகர் ஆயிடுச்சு.. திரும்பவும் அந்த மாதிரி ஆகிடும் போது பயமா இருக்கு அவங்க நம்ம கூடவே வந்திருக்கலாம் என்று சொல்ல ராமமூர்த்தி அவதான் புள்ள பாசத்துல ஆடுறாலே.. நாம என்ன பண்ண முடியும்? அவ மொதல்ல அவ புள்ள பாசத்தில் இருந்து வெளியே வரணும்‌. அவள் எவ்வளவு பெரிய அயோக்கியனு தெரிஞ்சு வெளியே வரணும். அதுவரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறார். ‌

அதன் பிறகு கோபி ரெஸ்டாரண்டில் நிறைய ஆட்கள் லீவு போட்டு விடவே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரன்ட்டில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்க சத்தம் இல்லாமல் உள்ளே வரும் பழனிச்சாமி ஒரு ஆரஞ்சு ஜூஸ் என்று சொல்லி பாக்கியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அதன் பிறகு இனிமே நான் எப்பவும் உங்க பக்கத்துல தான் இருப்பேன் பக்கத்து கடையில் நானே வாடகைக்கு எடுத்துட்டுட்டேன் என்று ஷாக் கொடுக்கிறார். உங்க ரெஸ்டாரன்ட் எல்லாம் கிடைக்காத பொருள் எல்லாம் என்னோட கடையில கிடைக்கும் என்று சொல்கிறார். பாக்கியா ரொம்ப சூப்பர் சார் என்று சந்தோஷப்படுகிறார்.

அடுத்ததாக கமலா சத்தமாக டிவி போட்டு பார்த்துக் கொண்டிருக்க ராதிகா சவுண்ட் கம்மி பண்ண சொல்லி கோபப்படுகிறார். அத்தைக்கு உடம்பு செய்யாம இருக்காங்க நீ எதுக்கு இவ்வளவு சவுண்டு வச்சிருக்க என்று கூறுகிறார். பிறகு ஈஸ்வரியை பார்க்க உள்ளே வந்து அத்தை நீங்க வெளியவே வரல அதான் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்ல ஏன் நான் செத்துட்டேனானு பார்க்க வந்தியா என்று ஷாக் கொடுக்கிறார். இந்த நேரம் பார்த்து கோபி வீட்டுக்கு வர ராதிகா ஈஸ்வரி பக்கத்தில் இருப்பதை பார்த்து எங்க அம்மாவ என்ன பண்ற என்று கோபப்படுகிறார். நான் என்ன பண்றேன் என்று ராதிகா கேட்க என் அம்மா பக்கத்துல நின்னுட்டு இருக்கு ஏதோ பண்ற மாதிரி இருந்தது என்று திட்டி ஈஸ்வரியை நலம் விசாரித்து சாப்பிட கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update