தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரியை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் கோபி அங்கு வர ராமமூர்த்தி எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று சரமாரியாக அடி கொடுத்த நிலையில் உன்னையே நம்பி வந்தவளுக்கு இவ்வளவு பெரிய துரோகம் பண்ணிட்டியே என்று ஆவேசப்படுகிறார்.
கோபி நான் எதுவும் பண்ணலப்பா என்று சொல்ல ராமமூர்த்தி அப்படி கூப்பிடாத இனி நீ எனக்கு புள்ளையும் இல்ல நான் உனக்கு அப்பாவும் இல்லை என்று கோபப்படுகிறார்.
இனியா உங்களுக்கு கொஞ்சம் கூட பாசமே இல்ல யார் மேலயும் பாசம் கிடையாது என்று சொல்ல கோபி சத்தியமா நான் எதுவும் செய்யல என்று இனியா மீது சத்தியம் செய்ய போக கையை பிடித்து தடுத்து நிறுத்தும் எழில் பொய் சத்தியம் செய்ய போறீங்களா என்று கோபப்பட்டு திட்டுகிறார்.
பிறகு ராமமூர்த்தி திரும்பவும் கோபியை திட்டி அடிக்க போக பாக்கியா தடுத்து நிறுத்தி போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று அழைத்துச் செல்கிறார். வீட்டுக்கு கோபமாக வந்த கோபி ராதிகாவிடம் சத்தம் போட கமலா கம்ப்ளைன்ட் கொடுத்தது நான்தான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
உங்க ரெண்டு பேரோட நிம்மதிக்கு தான் அவங்கள வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன் அது உங்களுக்கு போதாதா என்று ஆவேசப்படும் கோபி எங்க அம்மாவுக்கு ஏதாவது ஒன்னுனா உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்.. கொன்னுடுவேன் என்று கோபப்படுகிறார்.
அடுத்ததாக கோபி ஈஸ்வரி பார்க்க ஸ்டேஷனுக்கு வர இன்ஸ்பெக்டர் அவங்கள பார்க்க முடியாது கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப் போவதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர். பிறகு ஈஸ்வரியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ராமமூர்த்தி அழுது துடிக்கிறார்.
வீட்டுக்கு உடைந்து போய் வந்த அவரைப் பார்த்து பாக்கியா கண் கலங்கி அழுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.