Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி கொடுத்த ஷாக், ஜெயிலுக்கு போன ஈஸ்வரி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈஸ்வரியை நினைத்து ராமமூர்த்தி கலங்கி அழ அதை பார்த்து பாக்யாவும் கண்கலங்க மொத்த குடும்பமும் ஆளாளுக்கு ஒரு பக்கம் அழுது துடிக்கின்றனர்.

மறுபக்கம் ஆக்ரோஷமாக வீட்டுக்கு வந்த கோபி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து வீட்டில் உள்ள டிவி உட்பட எல்லா பொருட்களையும் தூக்கிப்போட்டு கோபத்தை காட்ட ராதிகா மற்றும் கமலா மிரண்டு போய் நிற்கின்றனர்.

இதையடுத்து எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் என்று கமலாவின் கழுத்தை நெறிக்க கோபி எங்க அம்மாவை கொலை பண்ண பாக்குறீங்களா என்று கோபப்பட உங்க அம்மா மேல கைய வச்சதும் உனக்கு கோவம் வருதுல எனக்கும் அப்படித்தான் கோவம் வருது என்று கொதிக்கிறார். எங்க அம்மாவ ஜெயிலுக்குள்ள அடச்சிட்டீங்க இப்போ உங்களுக்கு சந்தோஷமா போய் பார்ட்டி வெச்சு கொண்டாடுங்க என்று ஆவேசபடுகிறார்.

எல்லாம் நான் பண்ண தப்புதான்.. உன்னை திரும்பவும் பார்த்தது என்னுடைய தப்பு, உனக்கு வாழ்க்கை கொடுத்தது அடுத்த தப்பு என்று கோபப்பட யாரு யாருக்கு வாழ்க்கை கொடுத்தது நீங்கதான் என்கிட்ட வந்து கெஞ்சனீங்க என்று ராதிகா கோபப்பட வீடு ஜப்தியாக நிலைமையில் ரோட்ல நின்னுகிட்டு இருந்த ஞாபகம் இல்லையா என்று கோபி அதிர்ச்சி கொடுக்கிறார்.

எங்க அம்மாவுக்கு ஏதாவது ஒன்னுனா உங்க ரெண்டு பேரையும் வீட்டோட வச்சு கொளுத்திடுவேன் என கோபப்பட்டு கிளவுட் கிச்சனுக்கு வந்துவிட அங்கு வந்த சதீஷ் கோபிக்கு ஆறுதல் சொல்ல அம்மாவை நினைத்து அழுது புலம்புகிறார். அம்மாவுக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன் இப்போ ஜெயில்ல இருக்காங்க அவங்க சாப்பிட்டாங்களா இல்லையானு கூட தெரியல.. எந்த ஒரு பையனும் செய்யக்கூடாத பாவத்தை நான் செய்து விட்டேன் என்று கலங்குகிறார்.

மறுபக்கம் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி கூட்டி வந்து உட்கார வைத்து எல்லாத்தையும் காட்டி குழந்தையை எதுக்கு கலைச்சிங்க என்று கேள்வி கேட்க நான் எதுவும் பண்ணல.. நான் சொல்றதெல்லாம் உண்மைதான் என்று சொல்ல லத்தியை காட்டி மிரட்டுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update