Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதறி அழும் ராமமூர்த்தி, நீதிபதி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்யாவை கூண்டில் ஏற்றி விசாரிக்க அவர் சொன்ன விஷயங்களால் கோபியின் இரண்டாவது கல்யாணத்துக்கு பிறகும் இவங்களுக்கு இடையேயான உறவு வலுவா இருந்திருக்கு அதனால ஈஸ்வரி இப்படி பண்ணியிருக்காங்க என்று நீதிபதி சொல்கிறார்.

பிறகு கோபியை கூண்டில் ஏற்றி உங்க அம்மா தான் ராதிகாவை தள்ளி விட்டார்களா என்று கேட்க கோபி எனக்கு தெரியாது அந்த சமயத்தில் நான் வீட்டில் இல்லை என்று சொல்கிறார். உங்கம்மா உங்ககிட்ட பல தடவை இந்த குழந்தை வேண்டாம்னு சொல்லி இருக்காங்களா என்று கேட்க கோபி ஆமாம் என்று சாட்சி சொல்ல வழக்கறிஞர் அதையும் பதிவு செய்கிறார்.

இறுதியாக நீதிபதி ஈஸ்வரி தவறு செய்திருப்பதற்கான அனைத்து முகாந்திரங்களும் உள்ளன. ஆகையால் அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைய கமலா கை தட்டி ரசிக்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரியை பார்த்து பேச வேண்டும் என்று சொல்ல எழில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய போக ரொம்ப நேரம் ஆகியும் வராததால் பாக்கியா என்னாச்சு என்று பார்க்க வர எதிரே ராதிகா வருகிறார். பாக்கியா ராதிகாவுடன் அத்தை இப்படி எல்லாம் செய்யறவங்களே கிடையாது.. அவங்க அவங்க பையனுக்கு துரோகம் பண்ணுவாங்களா நேரம் பார்த்து பழி வாங்கிட்டீங்க நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்று கோபப்பட ராதிகா குழந்தையை இழந்த வலி எனக்குத்தான் தெரியும் என்று பதில் பேசுகிறார்.

எல்லோரும் ஈஸ்வரியை பார்க்க வெளியில் காத்திருக்க ஈஸ்வரி பாக்யாவை பார்க்க ஆசைப்பட பாக்யா உள்ளே வருகிறார். மாமியாருக்கு ஆறுதல் சொல்ல ஈஸ்வரி நான் காலம் முழுக்க இங்கதான் இருக்கணுமா என்று அழ கண்டிப்பா உங்கள வெளியே எடுத்து விடுவோம் கவலைப்படாதீங்க.. தைரியமா இருங்க என்று ஆறுதல் சொல்கிறார்.

வீட்டுக்கு வந்த ராமமூர்த்தி இனிமேல் ஈஸ்வரி வெளியே வரப் போறது கிடையாது.. நம்மளால எதுவுமே செய்ய முடியலையே என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.. கோவிலுக்கு போயிட்டு நிம்மதியா வந்தா அந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நினைக்கல, இனி அவ ஜெயிலிலேயே இருந்து சாக வேண்டியது தான் நானும் அவளை நினைச்சு நினைச்சு சாக வேண்டியதுதான் என்று அழுகிறார். எல்லோரும் அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று ஆறுதல் சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டு பெண்மணி பாக்யாவை பார்த்து ஈஸ்வரி குறித்து விசாரிக்க இன்னும் வெளியே வரவில்லை என்று சொன்னதும் அப்போ அவங்க தான் தப்பு பண்ணாங்களா என்று கேட்க பாக்கிய கண்டிப்பா இல்லை என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update