தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் கோபிக்கும் இடையே இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடக்க நடுவர்கள் என்ன சமைக்கறீங்க? போட்டியில் ஜெயிப்பீங்களா என்று கேட்க பாக்கியா 100 சதவீதம் இந்த போட்டியில் ஜெயிப்பேனு நம்பிக்கை இருப்பதாக சொல்ல கோபியும் கண்டிப்பாக ஜெயிப்பேன் என உறுதியாக சொல்கிறார். நல்லபடியா செய்து முடிச்சிடுங்க இல்லனா மானம் மரியாதை எல்லாம் போயிடும் என்று சொல்கிறார்.
இதற்கிடையில் பாக்கியா போனை எடுத்து எடுத்துப் பார்த்து சமைத்துக் கொண்டிருக்க ஈஸ்வரி இனியாவ பத்தி யோசிக்காமல் நீ சமைக்கிறது மட்டும் பாரு என்று சொல்கிறார்.
ஆனாலும் பாக்யா ஒரு நிமிஷம் நான் இனியாவுக்கு போன் பண்ணி பாத்துட்டு வந்துடறேன் என்று சொல்லி தனியாக வந்து போன் செய்ய இனியா போனை எடுக்காமல் இருக்க செழியனுக்கு போன் செய்து விசாரிக்க நான் அவன் பிரண்ட் வீட்டுக்கு வெளியில தான் மா இருக்கேன் இனியாவை கூட்டிட்டு போறேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.
பிறகு செழியன் பிரியா வீட்டு கதவைத் தட்ட வீட்டுக்குள் இருந்து வந்த வேலைக்காரி வீட்ல யாரும் இல்லை. நான் இந்த வீட்ல தான் வேலை செய்கிறேன் நான் வரும்போது யாரும் இல்ல வீடு பூட்டி தான் இருந்தது என் கிட்ட இருக்க சாவிய போட்டு தான் கதவை திறந்து வந்தேன் என்று சொல்லி வீட்டை பூட்டிக் கொண்டு செல்ல செழியன் புரியாமல் நிற்கிறார். செழியன் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்க அம்மாவுக்கு சொல்லிடலாமா என்று போனை எடுத்து வேண்டாம் பயந்துடுவாங்க என்று முடிவை மாற்றிக் கொள்கிறார்.
சீனியர் சொன்னா கேக்கணும் என்று இனியா நம்பரை கேட்க இனியா பிரண்ட்ஸ் தர முடியாது என்று சொல்ல அவர்களுடன் சண்டை உருவாகிறது. போன் பேச வெளியே வந்த இனியா இவர்களை பிரித்து விட முயற்சி செய்ய பவுன்சர்ஸ் வந்து சண்டையை பிரிக்கின்றனர். பப் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுக்க இவர்கள் எல்லோரும் வேண்டாம் என்று அழுகின்றனர்.
அடுத்ததாக கோபியின் செஃப் செய்த கேக் கருகி போக டென்ஷன் ஆகிறார். நடுவர்கள் வேற ஏதாவது புது டிஷ் பண்ணுங்க என்று கூல் செய்கின்றனர்.
மறுபக்கம் பாக்யா தனது டிஷ்சை முடித்து ஒரு பௌலில் மாற்றி அதை ஃப்ரிட்ஜில் வைக்க சொல்லி விட்டு திரும்பவும் போனை செழியனுக்கு போன் செய்ய இனியா வந்துட்டதாகவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் பொய் சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.