தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் இனியா மற்றும் அவரது நண்பர்கள் எல்லோரும் எங்கள விட்டுடுங்க என்று பப்பு ஓனரிடம் கெஞ்ச அவர் போலீஸ் வந்து பேசிக்கிட்டும் என்று சொல்கிறார்
நாங்க தான் குடிச்சிருக்கோம் அவங்க யாரும் குடிக்கல அவங்களையாவது விட்டுடுங்க என்று பாய்ஸ் சொல்ல ஓனர் மனசு மாறி பெண்களை மட்டும் போக சொல்ல அவர்களும் கிளம்பி வெளியே வரும்போது போலீஸ் உள்ளே வந்து விடுகின்றனர்.
உள்ளே நுழைந்த போலீஸ் எல்லோரிடமும் ஐடி கார்டு வாங்கி வயசை பார்த்து 21 வயசு கூட ஆகல அப்படி இருக்கும்போது நீங்க எல்லாம் எப்படி பப்புக்கு வந்தீங்க? நீங்க எப்படி உள்ள விட்டீங்க? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
நீங்க இங்க வந்தது உங்க வீட்டுக்கு தெரியுமா என்று கேட்க எல்லாரும் தெரியாது என்று சொல்ல படிச்சி பெரிய ஆளா வயதை விட்டுட்டு பப்பு பார்க்குனு சுத்திக்கிட்டு இருக்கீங்க உங்களையெல்லாம் ஜெயில்ல போட்டா தான் புத்தி வரும் என்று அதிர்ச்சி கொடுக்க தெரியாம பண்ணிட்டோம் விட்டுடுங்க என்று மன்னிப்பு கேட்கின்றனர்.
செழியன் இனியாவுக்கு போன் செய்ய இனியா என் அண்ணன் கிட்ட பேசிக்கட்டுமா என்று கேட்க லேடி போலீஸ் அதெல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் எல்லாரையும் ஜிப்பில் ஏற்ற சொல்ல லேடி போலீஸ் இனியாவையும் அவளது தோழியையும் வெளிய அழைத்து வர பிரண்டுடன் ரெஸ்டாரன்ட் வந்திருந்த ராதிகா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு போலீஸிடம் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்க இனியா நடந்த விஷயத்தை சொல்லி எங்கள காப்பாத்துங்க என்று கெஞ்சுகிறார். ராதிகா இனியா தெரியாம இங்க வந்துட்டா அவளை விட்டுடுங்க என்று சொல்ல அவளது தோழிகளும் எங்களையும் காப்பாத்துங்க என்று கெஞ்சுகின்றனர்.
எதுவாக இருந்தாலும் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுங்க என்று லேடி போலீஸ் சொல்ல ராதிகா இன்ஸ்பெக்டரிடம் அவங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனா வாழ்க்கையே போயிடும் விட்டுட்டு என்று கேட்க அவர் இதெல்லாம் அவங்க யோசிச்சு இருக்கணும் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசிக்கோங்க என்று சொல்லி விடுகிறார்.
பிறகு ராதிகா தன் அண்ணன் மூலமாக டிஎஸ்பியிடம் பேசி இனியாவை வெளியே அழைத்து வருகிறார். பிறகு இனியாவை கூட்டிச்சென்று அறிவில்லையா என்று திட்ட செழியன் போன் செய்ய போனை வாங்கிய ராதிகா நான் ராதிகா பேசுறேன் இனியா இங்கதான் இருக்கா அவ இப்ப உனக்கு ஒரு லொகேஷன் அனுப்புவா அங்க வந்து சேரு மத்ததை நேர்ல பேசிக்கலாம் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
பிறகு இனியா லொகேஷன் அனுப்ப பப்பு முகவரியாக இருப்பதை பார்த்து செழியன் அதிர்ச்சியாகி அங்கு வந்து இனியாவை என்ன பண்ணீங்க என்று ராதிகாவிடம் சத்தம் போட அவளை காப்பாற்றினேன் என்று ராதிகா பதிலடி கொடுக்கிறார். நான் மட்டும் இப்போ இனியாவை காப்பாற்றலைனா அவ ஸ்டேஷன்ல தான் இருந்திருப்பா குடும்பத்தோட ஸ்டேஷனுக்கு போய் அவமானப்பட்டு இருப்பிங்க, பப்புக்கு வந்துட்டு குடிச்சிட்டு கும்மாளம் போட்டா போலீஸ் புடிச்சிட்டு தானே போவாங்க என்று சொல்ல இனியா பப்புக்கு வந்தது உண்மைதான் ஆனால் குடிக்கல என்று சொல்ல செழியன் இனியாவை பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்க ராதிகா இனியாவின் கையை பிடித்து அப்படியெல்லாம் விட முடியாது உங்க அம்மாவுக்கு போன் போட்டு இங்க வர சொல்லு என்று செக்மேட் வைக்கிறார்.
இதனால் இனியா மற்றும் செழியன் என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…