Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவை அரைத்த பாக்யா, பாக்யாவிற்கு ஆறுதல் சொல்லும் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி காரில் வரும்போது இனியாவை திட்டியபடி வருகிறார்.

மறுபக்கம் போட்டி நடந்து முடிய நடுவர்கள் கோபி ஜெயித்ததாக அறிவிக்கின்றனர். கோபி பாக்யா பயந்து ஓடிட்டாளா என்று செல்வியிடம் நக்கலாக பேச இனியாவுக்கு பிரச்சனை என்று உண்மையை உடைக்க கோபி பதறுகிறார். ராதிகா தான் போன் போட்டு வர சொன்னாங்க என்று சொன்னதும் ராதிகாவுக்கு போன் செய்ய போனை எடுக்காத நிலையில் கோபி அவசர அவசரமாக ஓடி வருகிறார்.

அடுத்ததாக இனியாவுடன் வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி ரவுண்டு கட்டி திட்டிக் கொண்டிருக்க ஒரு வார்த்தை கூட பேசாத பாக்கியா நேராக ரூமுக்கு சென்று கீழே உட்காந்து ராதிகா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து தலையில் அடித்தபடி அழுகிறார்.

வீட்டுக்கு வந்த செல்வி இனியாவிடம் இனியா பாப்பா என்னாச்சு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டுவிட்டு ஈஸ்வரியிடம் அம்மா போட்டியில தோத்து போயிட்டோம் என்று சொல்கிறார். அதன் பிறகு பாக்யா கீழே இறங்கி வர பாக்யாவிடமும் அக்கா நாம தோத்துட்டோம் என்று சொல்ல ஆமா செல்வி நான் மொத்தமா தோத்து போயிட்டேன் என்று படியில் உட்கார்ந்து அழுகிறார்.

எல்லோரும் பாக்யாவை சூழ்ந்து ஆறுதல் சொல்ல இனியா பக்கத்தில் உட்கார்ந்து மன்னிப்பு கேட்க பளார் பளார் என அறையும் பாக்யா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா இல்லையா? இல்ல வெளிய போகும்போதே கழட்டி வச்சுட்டு போயிடுவியா என்று கோபப்படுகிறார். உன்னால எவ்வளவு பிரச்சனை எத்தனை முறை உன் ஸ்கூல்ல வந்து உனக்காக நின்னு இருக்கேன் என்று திட்டுகிறார்.

உங்கள நம்பலைன்னா நம்பி இருந்தா இதை பண்ணி இருப்பேன் அதை பண்ணி இருப்பேன்னு பேசுறீங்க நம்பி இப்படி வெளியே அனுப்பினால் என்ன பண்ணி வச்சிருக்க என்று கோபப்படுகிறார். உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா இல்ல களிமண் தான் இருக்கா என்று ஆவேசப்படுகிறார்.

இனியா பிரெண்ட்ஸ் கூப்டாங்க அதனால தான் போயிட்டேன் என்று சொல்ல ஒவ்வொரு முறையும் நீ இது தான் சொல்ற இதுவரைக்கும் நடந்த விஷயங்களில் இருந்து நீ ஒண்ணுமே கத்துக்கல என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update