தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க செல்வி இரண்டு முறை கூப்பிட்டும் குரல் கொடுக்காமல் இருக்கிறார். என்னாச்சுகா தூங்கிட்டு இருக்கியா என்று கேட்க நைட்லயே தூக்கம் வரமாட்டேங்குது பகல்ல எங்க தூங்குறது என்று சொல்லிவிட்டு லிஸ்ட் எடுத்துட்டியா என்று கேட்க எடுத்துட்டேன் என்று செல்வி சொன்ன மளிகை கடையில் கொடுத்துட்டு வந்துரு என்று சொல்லுகிறார். செல்வி கிளம்ப எதிரில் பழனிச்சாமி வருகிறார். எங்க கிளம்பிட்டீங்க என்று கேட்க மளிகை சாமான் பில்லு கொடுத்துட்டு வரேன் சார் என்று சொல்ல பாக்யா மேடம் என்ன பண்றாங்க என்று கேட்க அவங்க தான் ஒரே வருத்தமா இருக்காங்க ஏதாவது சொல்லி ஆறுதல் சொல்லுங்க சார் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் செல்வி.
பாக்கியாவிடம் வந்த பழனிச்சாமி என்ன மேடம் என்ன ஆச்சு என்று கேட்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று கேட்கிறார் இருக்காங்க யாராவது தோல கொடுத்து உட்கார்ந்தால் அழற அளவுக்கு உள்ள வருத்தத்தை வச்சுக்கிட்டு சமாளித்துக் கொண்டு இருக்காங்க என்று சொல்லி கண்கலங்குகிறார். இந்த ரெஸ்டாரன்ட் தொடங்க முக்கிய காரணமே என் மாமா தான் அவருக்காக இந்த ஹோட்டல்ல ஒரு பெரிய போட்டோ வெச்சி தெரிஞ்சவங்கள கூப்பிட்டு ஒரு திறப்பு விழா பண்ணப் போறேன் பண்ணலாமா சார் என்று கேட்க தாராளமா பண்ணுவ மேடம் அவங்களுக்கான மரியாதையை கொடுக்கிறதே பெரிய விஷயம் என்று பாராட்டுகிறார் பழனிச்சாமி.
மறுபக்கம் ஈஸ்வரி ராமமூர்த்தியை நினைத்து அழுது கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து ஜெனி வர அவரிடம் எழில் எடிட் பண்ண வீடியோவை டிவில போட்டு விடு ஜெனி என்று சொல்லுகிறார்.உடனே ஜெனி போட்டு விட ஈஸ்வரி அதை பார்த்து இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். ஈஸ்வரி ஜெனி இடம் போய் காபி போட்டு எடுத்துட்டு வரியா என்று சொல்லி அனுப்பி வைக்க அந்த நேரம் பார்த்து செழியன் வந்து டிவியை ஆஃப் பண்ணி விடுகிறார் ஏன் செழியா ஆப் பண்ண என்று கேட்க போட முடியாது பாட்டி நீங்க பார்த்து பார்த்து அழுதுகிட்டே இருக்கீங்க என்று சொல்லுகிறார். இந்த வீட்ல உங்க தாத்தாவோட குரல் இல்லாத இடமே கிடையாது. எல்லாரும் வேலைக்கு போயிட்டு வாங்க ஜெனியும் நானும் தான் இருப்போம் பேசிக்கிட்டே இருப்பாரு பல நேரம் அவர்கிட்ட பேசறது கொஞ்சம் நிறுத்துறீங்களா என்று சொல்லி இருக்கேன் ஆனா இப்போ ஒரு வார்த்தை பேசிட மாட்டாரான்னு ஏங்கிக்கிட்டு இருக்கேன் என்று அழுது கொண்டே இருக்கிறார். செழியன் அவருக்கு ஆறுதல் சொல்ல சரி நான் ரூமுக்கு போய் படுத்துகிறேன் என்று சொல்ல ஜெனி அழைத்து செல்கிறார். தூங்கிட்டாங்களா பாட்டி என்று கேட்க இல்ல பர்த்டே பங்க்ஷன் வீடியோவை போன்ல பார்த்து கிட்டு இருக்காங்க என்று சொல்ல உனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜெனி என்று செழியன் சொல்லுகிறார்.
ஏன் செழியா இப்படி பேசுற, எங்க அம்மாவும் அவங்களோட அம்மா இறந்தபோது இப்படித்தான் இருந்தாங்க, இத்தனை வருஷம் அவங்க கூட வாழ்ந்து இருக்காங்க ஆனா திடீர்ன்னு அவங்க வாழ்க்கையில இல்லைன்னு நினைக்கும் போது அவங்க அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால் கொஞ்ச நாள் ஆகும் கொஞ்ச நாள்ல எல்லாமே சரியா போகும் என்று செழியனுக்கு ஆறுதல் சொல்லுகிறார் ஜெனி.
ஏற்கனவே அப்பா இல்ல அந்த இடத்துல இருந்து இந்த குடும்பத்தை தாத்தா வழி நடத்துனாரு ஆனா இப்போ அவரும் இல்ல, எழில் இல்ல நான் எப்படி குடும்பத்தை வழிநடத்த போறேன் என்ற பயம் எனக்குள்ள இருக்கு என்று செயின் கண்கலங்க அப்படியெல்லாம் ஆட்டிவிட மாட்டாங்க என்று சொல்லுகிறார். அம்மா எதுவும் என்கிட்ட சொல்ல மாட்டாங்க ஆனா நானா இந்த குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன் என்னால் முடியுமா ஜெனி என்று கேட்க உடனே அவர் நீ நம்மளோட கல்யாண அப்போ எப்படி இருந்த இந்த குடும்பத்தை மேல எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த, ஆனா இப்போ குடும்பம் தான் எல்லாமே என்று நினைக்கிற உன்னால முடியும் செழியா என்று ஆறுதல் சொல்லுகிறார்.
கோபி மதியம் ஒரு மணிக்கு எழுந்து வர ராதிகாவிடம் ஒரு மணி ஆயிடுச்சு என்று கேட்க சரி தூங்கிட்டு இருந்தீங்க அதனால எழுப்பல என்று சொல்லுகிறார் சரி வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட, நீ சாப்டியா என்று கேட்கிறார் இல்ல கோபி நீங்க சாப்பிடுங்க வாங்க என்று கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுகிறார். கோபியிடம் அன்பாக பேச எங்க அப்பா போனதுக்கப்புறம் அனாதையா இருக்கணும்னு தோணுச்சு ஆனா, நீ இப்படி பார்த்துக்கொள்வது எனக்காக நீ இருக்கிற என்று சந்தோஷம் எனக்கு இருக்கு நீயும் என்னை விட்டுட்டு போயிடாத ராதிகா என்று சொல்ல நாயே உங்கள விட்டு போக போறேன் சாப்பிடுங்க கோபி என்று சொல்லுகிறார். ஆனா ஒன்னு குடிக்க மட்டும் செய்யாதீங்க கோபி என்னால முடியல உங்கள கூட்டிட்டு வர என்று சொல்ல அதை பத்தி பேசாத ராதிகா எனக்கு அசிங்கமா இருக்கு வருத்தமா இருக்கு என்று சொல்லிவிட்டு நான் கண்டிப்பா குடிக்கிறத ஸ்டாப் பண்ணிடுவேன் என்று சொல்லுகிறார். இருவரும் உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.
செழியன் வெளியே போனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். செழியன் இடம் கோபி என்ன பேசுகிறார்? அதற்கு செழியன் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.