கோபியை வெளுத்து வாங்கியுள்ளார் பாக்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் பாக்யாவை சந்திக்க வீட்டுக்கு வர இனிய மற்றும் ஜெனி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் ஜெனி எழிலை கூப்பிட்டு உட்கார வைக்க உடனே செழியன் வருகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு செழியன் பாக்கியா படபூஜைக்கு வராததை பற்றி திட்டி பேசுகிறார் இனியாவும் பதிலுக்கு அவங்களுக்கு ரெஸ்டாரன்ட் தான் புது வீடு அங்க தான் இருப்பாங்க இப்ப அவங்களுக்கு பசங்க மேல அக்கறையே கிடையாது என்று சொல்ல ஜெனி ஒரு ஆளாக ஆண்ட்டி அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டாங்க எழிலோட பட பூஜை அவங்களுக்கு எவ்வளவு முக்கியம் அதைவிட முக்கியமான வேலையா இருந்ததால தான் வர முடியல என்று எவ்வளவு பேசியும் செழியன் மற்றும் இனியா இருவரும் பாக்யாவை திட்டிக் கொண்டு இருக்கின்றனர் அதனை கேட்க முடியாமல் எழில் கண்கலங்கி நான் கிளம்புறேன் என்று அங்கிருந்து கிளம்பி செல்ல, இவன் எவ்வளவு பட்டாலும் அம்மா அம்மான்னு தான் போய் நிப்பான் என்று சொல்கிறார்.
மறுபக்கம் கோபி பாக்கியா ரெஸ்டாரன்ட் இழுத்து மூட போறாங்க பிரஸ் வருவாங்க மீடியா வருவாங்க என்று ஆர்வமுடன் போனை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செந்தில் வருகிறார். அவரிடம் பாக்யாவோட ரெஸ்டாரன்ட் காலி ஆயிடும் என் பசங்க எல்லாம் என் கூட வந்துருவாங்க என்றெல்லாம் பேச, உன்ன பாத்தா எனக்கே பயமா இருக்கு கோபி ஏன் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்க என்று சொல்ல நீ இங்க இருந்தா என் மைண்ட மாத்திடுவ அதனால நான் வீட்ல போய் டிவில லைவ்வா பாக்க போறேன் என்று கிளம்புகிறார்.
வீட்டில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் கோபி என்ன இன்னும் பிரச்சனை ஸ்டார்ட் ஆகல எப்ப ஸ்டார்ட் ஆகும் என்று ஆர்வத்தோடு காத்திருக்க அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா காபி ஜூஸ் ஏதாவது கொடுக்கவா மாப்பிள்ளை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் அத்தை நான் மதியம் என்ன லஞ்ச் என்று கேட்கிறார் இன்னும் யோசிக்கல என்று சொல்ல கொஞ்சம் ஏதாவது வெயிட்டா ஸ்பெஷலா பண்ணுங்க என்று சொல்லுகிறார். கோபி யாராவது சாப்பிட வராங்களா என்று கேட்க அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது ராதிகாவின் அம்மா கதவை திறந்து பார்க்க பாக்யா நிற்கிறார் நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்க பாக்யா எதுவும் சொல்லாமல் கோபமாக வந்து உள்ளே நிற்கிறார்.ராதிகாவும் வந்துவிட உன் வீட்டு இது அங்க இருக்கு பாரு மாறி வந்துட்டியா கெளம்பு என்று கோபி சொல்லுகிறார்.
உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இங்க வந்திருக்க என்று கோபி கேட்க உங்களுக்கு என்ன பிரச்சனை என் மேல வன்மத்தை காட்டணுமா என்கிட்ட மோதணும் அதை விட்டு உயிரோடு விளையாடிட்டு இருக்கீங்க. என்று பேச கோபி எதுவும் தெரியாதது போல் நிற்கிறார். உடனே ராதிகா என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்ன ஆச்சு என்று கேட்க, கொஞ்ச நாள் முன்னாடி ஈஸ்வரி ரெஸ்டாரண்ட்ல இருந்து கெட்டுப் போன கரியில் பிரியாணி சமைச்சதா ஒரு நியூஸ் வந்தது பார்த்தீங்களா என்று கேட்க உடனே ராதிகாவின் அம்மா நான் தான் பார்த்தேன் கெட்டுப்போன கறில சமைச்சு கொடுத்து இருக்க உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்க அதற்கு பாக்யா அசிங்கப்படணும்னா அது நான் கிடையாது உங்க மருமகன் தான் என்று சொல்லுகிறார். உடனே ராதிகா என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்லுங்க என்று சொல்ல கோபி ஆனந்தை அனுப்பிய விஷயத்தையும் , ஆனந்தை வைத்து பிரியாணியில் கெட்டுப்போன கறியை போட சொன்னது கோபி தான் என்றும் சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நிற்கிறார்.
கோபியும் ஒன்றும் புரியாமல் சும்மா கதை எல்லாம் விட்டுட்டு இருக்காதே என்று நாடகம் ஆட நான் பேசுறது எல்லாமே உன் மனம் உங்களுக்கும் தெரியும். நான் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் என சொல்லுகிறார். உடனே ராதிகா இதுக்கெல்லாம் சாட்சி இருக்கா என்று கேட்க இருக்கு சார்ஜ் இருக்கு இவர் அனுப்புன செஃப்தான் சாட்சி.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவர் அவருக்கு போன் பண்ணி ஏற்கனவே பக்ரித் ஆர்டர் க்ளோஸ் பண்ணது எல்லாமே இப்போ ஆயுத பூஜை ஆர்டர் முடிஞ்சிடுச்சா பாக்கியாவோட ரெஸ்டாரன்ட் க்ளோஸ் பண்ணிடுவாங்களான்னு பேசிக்கிட்டு இருந்தாரு அதை கேட்டுட்டு தான் நான் இங்க வரேன் என்று சொல்ல ராதிகா இன்னும் அதிர்ச்சி ஆகிறார். என்ன பழிவாங்குவது தான் நினைச்சு எத்தனை பேரோட உயிரோட விளையாடு இருக்கீங்க நீங்க அனுப்புன செஃபோட குழந்தையை செத்துப் பொழச்சி வந்திருக்கது தெரியுமா அது மட்டும் இல்லாம அம்மான்னு சொல்லி பின்னாடியே திரிந்தீர்களே அவங்க எவ்வளவு பாதிக்கப்பட்டாங்க தெரியுமா? அவங்க தான் இந்த பிரியாணி ஆர்டர் விளக்கேத்தி ஆரம்பிச்சு வச்சாங்க என்னால தான் இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு ரூம விட்டு வெளியே வராம இருந்தாங்க அது தெரியுமா உங்களுக்கு என்று கேட்கிறார்.
பிறகு பாக்கியா என்ன சொன்னார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.