Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியால் கடுப்பான பாக்கியா.. வருத்தத்தில் கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யாவை பார்க்க போன கோபி ஒவ்வொருத்தரா என்னை தேடி வந்து அழைக்கணும்னு நினைக்கலையா எல்லோரையும் அலையவிடனும் நினைச்சுட்டு இருக்கியா என கண்டபடி பேசுகிறார். இவ்வளவு நாளா நான் சந்தோஷமா வாழ்ந்து இருக்கீங்க நினைக்கிறியா ஒரு மிஷின் மாதிரி இந்த குடும்பத்துக்காக உழைத்திருக்கிறேன். எல்லாம் எதுக்காக என்னுடைய குடும்பம் நல்லா இருக்கணும்னு ஒரே காரணத்துக்காக அந்த குடும்பத்தில் நீயும் தானே இருந்த? என்ன பண்ண ஒரே ஒரு தப்பை மட்டும் இவ்வளவு பெருசு பண்ணுறியே நான் செஞ்ச இவ்வளவு நல்ல விஷயங்களை நினைச்சு பார்க்க மாட்டியா? இனியா படுற கஷ்டத்தை என்னால பார்க்க முடியல என கூறுகிறார்.

அதன் பிறகு கோபி நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என கேட்க பாக்யா நீங்க இதுவரைக்கும் செய்த தப்பு இனி அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு என தைரியமா செய்ய மாட்டீங்கன்னு எந்த நம்பிக்கை இல்லை நான் வருது? இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் எனக்கு உத்தரவாதம் கொடுங்க நான் இப்பவே வரேன் என சத்தியம் கேட்கிறார். முதலில் தயங்கிய கோபி இப்போது பாக்யாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இதை தவிர வேறு வழி இல்லை பொய் சத்தியம் செய்துவிடலாம் என முடிவு செய்து பாக்யாவில் கையை பிடித்து இனிமே சத்தியமா என்னுடைய வாழ்க்கை நீதான் ராதிகா என கூற இதனால் கடுப்பான பாக்கியா கோபியின் கையை பிடித்து தள்ளிவிட்டு வெளியே போக சொல்கிறார்.

இதனால் அதிர்ச்சியான கோபி நான் தாய் தவறி சொல்லிட்டேன் என சொல்ல அதை எல்லாம் பாக்கியம் கேட்க தயாராக இல்லை. பிறகு கோபி வெளியே சென்று விடுகிறார். இந்தப் பக்கம் ராதிகா மயூராவிற்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் வருத்தமாக இருக்கிறார். மேலும் பாக்யா கேட்ட கேள்விகளை நினைத்து கண்ணீர் விடுகிறார்.

பாக்கியா வருத்தத்தோடு உட்கார்ந்திருக்க அவரை சாப்பிட சொல்லி சொல்கிறார் எழில். ஆனால் பாக்யா எனக்கு பசி இல்லை எங்கேயாச்சும் வெளியே கூட்டிட்டு போறியா ஒரே மனசு இறுக்கமா இருக்கு என சொல்ல எழில் பீச்சுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு பாட்டு ஒலிக்க அந்த பாட்டு நான் முதல் முதலா கல்யாணம் ஆகி தாத்தா வீட்டுக்கு போனப்ப இந்த பாட்டு தான் ஓடுச்சு என பழைய நினைவுகளை அலசுகிறார் பாக்யா.

அதன் பிறகு உனக்கு அப்பாவை பற்றிய விஷயம் என கேட்க ரொம்ப நாள் ஆச்சு எனக்கு முன்னாடியே தாத்தாவுக்கு தெரிந்திருக்கு. அப்பாவை இப்படி பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு அதுக்கு அப்புறம் அவர் மேல கோவமா வந்துடுச்சு. ஒரு கட்டத்துல அவர பார்க்கவே பிடிக்கல இப்பயாவது நீ நல்ல முடிவு எடுத்தியே என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update