தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனி செழியனிடம் ஈபி பில் கட்ட சொல்ல அவன் கொடுக்கிற பணத்துக்கு மேல ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது. அப்பாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புனாங்களா கட்டட்டும் அப்பதான் கஷ்டம் தெரியும் என கூறுகிறான். இதனால் கோபப்படும் ஜெனி நீ உங்க அப்பா மாதிரி எந்த மாற்றமும் இல்ல ஒரு நாள் நீயும் அவர் மாதிரி பண்ணாலும் பண்ணுவ என சொல்ல கடுப்பாகும் செழியன் வீட்டை விட்டு ஆஃபிஸ்க்கு கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக எழில் அமிர்தா வீட்டிற்கு வந்து மனது கஷ்டமாக இருப்பதாக சொல்லி பேசிவிட்டு செல்கிறார். பிறகு அமிர்தாவின் பெற்றோர் என்னோட வீட்டு மேல இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமா போயிட்டே இருக்கு. எழில் விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்திருக்க எனக்கு கேட்க அமிர்தா ஏற்கனவே எடுத்த முடிவு தான் என சொல்ல இருவரும் இந்த கல்யாணம் வேண்டாம் என்பது போல சொல்ல அமிர்தா அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.
பாக்யாவுக்கு ஆர்டர் கொடுத்தவர் ஒருவர் போன் செய்து ஒரு வாரமாக சாப்பாடு வரவில்லை ஒழுங்கா சாப்பாடு கொடுப்பதாக இருந்தால் பண்ணுங்க இந்த நான் வேற ஆளை பார்த்துக் கொள்ளும் என் சத்தம் போட பாக்யா அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். பிறகு என்ன பிரச்சனை நடந்தாலும் சப்ளை செய்வதை நிறுத்தக்கூடாது பெருசா ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்த பக்கம் ராதிகா வீட்டில் அண்ணனும் அம்மாவும் திருமணம் பற்றி பேச இப்போது என்ன அவசரம் என ராதிகா சொல்ல அப்போது கோபி வீட்டிற்கு வருகிறார். ராதிகாவின் அண்ணன் அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை திருமண வேலையை ஆரம்பிக்கல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே எனக்கே கோபி அதெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்ல ராதிகா இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update