தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு இனியா கோபியுடன் வெளியே சென்று இருக்க இந்த பக்கம் வீட்டில் பாக்கியா இனியா வராததால் தவித்துக் கொண்டிருக்கிறார். இதுக்கெல்லாம் நீதான் காரணம் என் நேரம் கோபி இருந்திருந்தால் அவன் கூட்டிட்டு வந்து இருப்பான் என ஈஸ்வரி சத்தம் போட பிறகு செல்வி மற்றும் பாக்கியா என இருவரும் ஸ்கூலுக்குச் சென்று இனியவை தேட அங்கு மிஸ் இனியா வீட்டுக்கு கிளம்பி விட்டதாக சொல்ல தெருவாக தேடி அலைகின்றனர்.
இந்த பக்கம் கோபி செழியனுக்கு போன் போட்டு இனியா தன்னுடன் தான் இருக்கிறார். வீட்டில் சொல்லிவிடு தேட போறாங்க என சொல்ல சரி என சொல்லும் செழியன் வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகிறான். பிறகு இனியாக காணவில்லை என அழுது புலம்பி வீட்டுக்கு வரும் பாக்யாவிடம் ஜெனி இனியா எங்கே எனக் கேட்க இருவரும் பதறுகின்றனர்.
பிறகு செழியன் ஹாய் அக்கா உக்காந்து காபி குடித்துக் கொண்டிருக்க சென்னை மற்றும் பாக்யா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவெடுக்கின்றனர். இந்த நேரத்தில் இனியா கோபியுடன் காரில் வந்திருந்த ஜெனி எங்க போயிருந்த வீட்ல இன்பார்ம் பண்ண மாட்டியா என சத்தம் போட கோபி நான்தான் கூட்டிட்டு போயிருந்தேன். என்ன பிரச்சனை என கேட்க இனியா வீட்டுக்கு வராததால் தேடி அலைஞ்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண கிளம்பிட்டு இருந்தோம் என சொல்கிறார்.
அதன் பிறகு இனியா அப்பாவோட போனதுல எல்லாத்தையும் மறந்துட்டேன் என சொல்லி உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.