Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்டர்வியூவிற்கு கிளம்பிய பாக்கியா.. காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இன்டர்வியூக்கு போகும் பாக்கியவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பி வைக்கின்றனர் ஜெனி, செல்வி மற்றும் மாமனார். பிறகு இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு போக முதலில் பாக்கியாவை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். பிறகு உங்களிடம் இருந்துதான் எங்களுக்கு மெசேஜ் வந்தது என மெசேஜை காண்பித்து பிறகு உள்ளே செல்ல கேட்டரிங் நடத்துபவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என எழிலை வெளியே வை காத்திருக்க சொல்கின்றனர்.

பாக்கியா உள்ளே இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்ற போது பாக்யாவின் உருவத்தைப் பார்த்து எல்லோரும் கேள்வி கிண்டல் செய்கின்றனர். இது வீட்ல சமைக்கிற விஷயம் இல்ல கேட்டரிங் ஆர்டர் நீங்க தப்பா மாறி வந்துட்டீங்க போல கிளம்பி போங்க என சொல்ல மண்டபத்திற்கு சமைக்கிற ஆர்டருக்காக தான் வந்தேன் என பாக்கியா சொல்ல பிறகு லிஸ்டில் அவருடைய பெயரை தேர்வு செய்து உட்கார வைக்கின்றனர்.

பிறகு அங்கிருந்தவர்கள் எல்லோரும் பெரிய பெரிய கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர்கள் என்பதை தெரிந்து பாக்யாவிற்கு மேலும் பதற்றம் ஆகி எழிலுக்கு போன் போட நீ என்ன பண்ணலாம்னு மட்டும் யோசி மத்தவங்கள பத்தி கவலைப்படாத என ஆறுதல் கூறுகிறார். பிறகு எல்லோரிடமும் பயோடேட்டா கேட்க பாக்யா அப்படின்னா என்ன என கேட்க மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றனர்.

பிறகு மண்டபத்தில் ஓனர் வந்து இன்டர்வியூக்கு வந்திருப்பவர்கள் பற்றி விசாரிக்கிறார். அதன் பிறகு சமையல் கேட்டரிங் ஆர்டர் நடத்துபவர்களுக்கு கண்டிப்பாக சமையல் தெரிந்திருக்க வேண்டும். ஐந்து பேராகப் பிரித்து சமையல் செய்ய வைத்து அதிலிருந்து தேர்வு செய்யலாம் என கூறுகிறார். அதன் பிறகு உங்களுக்கு 15 நிமிடம் தான் டைம் கொடுக்கப்படும் அதற்குள் உங்களது மேஜையின் மீது இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நல்ல ஒரு டிஸ் செய்ய வேண்டும் என கூறுகின்றனர். இதனால் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். பாக்கியாவும் என்ன செய்வது என தெரியாமல் குழம்ப இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update