Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை திட்டிய ராதிகாவின் அம்மா.. செழியன் பேச்சை மீறி சென்ற ஜெனி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யா எழிலுக்காக காத்துக் கொண்டிருக்க வீட்டுக்கு வந்தவன் அம்மாவிடம் தயாரிப்பாளர் படத்தை நான் நினைச்ச மாதிரி பண்ண சொல்லிட்டார் என சந்தோஷமாக சொல்கிறார்.

பிறகு அமிர்தாவுக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார். ஆனால் வர்ஷினியுடன் பைக்கில் வந்த விஷயத்தை சொல்ல மறந்து போனை வைத்து விடுகிறார். இந்த பக்கம் அமிர்தா ஏன் இதை சொல்லாமல் விட்டார் ஒருவேளை அவர் எல்லாத்தையும் சொல்லும் அளவிற்கு அவர் மனதில் இன்னும் இடம் பிடிக்கவில்லையா என குழம்ப அடுத்த நிமிடமே அமிர்தாவுக்கு மீண்டும் போன் வருகிறது. இல்லங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் உங்க வீட்டு வழியாகத்தான் வீட்டுக்கு வந்தேன் அது சொல்ல மறந்துட்டேன் அதுக்காகத்தான் போன் பண்ணேன் என சொல்லி வர்ஷினியுடன் பைக்கில் வந்த விஷயத்தை கூறுகிறார். பிறகு அமிர்தா நிம்மதி அடைகிறார்.

அடுத்ததாக இந்த பக்கம் ராதிகா டல்லாக அமர்ந்திருக்க அப்போது அவரது அண்ணன் ஏன் இப்படி இருக்க என கேட்க எல்லாம் நல்லபடியா நடக்குமா என கேட்கிறார். எல்லாம் சரியாக நடக்கும் நீ சந்தோஷமா இது என அவர் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வர அப்போது ராதிகாவின் அம்மா உங்கள் வீட்டில் யாருக்காச்சும் சொல்லி இருக்கீங்களா என கேட்கிறார். கோபி ஆமாம் அம்மாவிடம் சொல்லி இருக்கேன் என சொல்ல போச்சு அவங்க ஒருத்தரு போதும் வந்து கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க என கூறுகிறார்.

உடனே கோபி அம்மா அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க என சொல்ல அவங்க இங்க வந்து எப்படி எல்லாம் பேசினாங்கன்னு எங்களுக்கு தான் தெரியும் என கோபப்படுகிறார். அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என கோபி சொல்ல என்ன பாப்பிங்க அவங்க எங்களை அசிங்கப்படுத்துவாங்க அத பாப்பிங்களா என கேட்கிறார். என்ன நடந்தாலும் ராதிகா கழுத்தில் நான் தாலி கட்டுவேன் அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறுகிறார்.

பிறகு இந்த பக்கம் பாக்கியா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ரிசப்ஷனுக்கு சமைக்க கல்யாண மண்டபத்திற்கு கிளம்புகிறார். ஜெனி நான் உங்களோடு வரேன் என சொல்ல செழியன் வேண்டாம் என சொல்லியும் அவன் பேச்சைக் கேட்காமல் கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update