தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் செல்வி மணமக்கள் பெயரை ஆங்கிலத்தில் இருக்க அதை கூட்டி படித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வரும் மேனேஜர் இங்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க கிச்சன்ல வேலை இல்லையா என அனுப்பி வைக்கிறார்.
பின்னர் ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்து இருக்க அப்போது அங்கு வரும் இனியா பசிக்குது சாப்பிட ஏதாவது கொடுங்க என சொல்ல பிறகு செழியன், எழில், இனியா என மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாற கூட்டு பொரியல் எதுவும் இல்லையா என இனியா கேட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்ல செழியன் எனக்கும் எதுவும் இல்லாம சாப்பிட பிடிக்கல என சொல்கிறான்.
பிறகு ஈஸ்வரி மூவருக்கும் ஆம்லெட் மற்றும் அப்பளம் போட்டு கொடுக்கிறார். செழியன் தாத்தா பற்றி கேட்க எழில் அவர் பிரண்டோட பொண்ணு கல்யாணத்துக்கு போயிருக்கார் என சொல்ல நீ கூட்டிட்டு போக வேண்டியது தானே என செழியன் சொல்ல இருவருக்கும் இடையே சண்டை உருவாக ஈஸ்வரி அதை தடுக்கிறார்.
அடுத்ததாக கோபி ராதிகா எல்லோரும் மண்டபத்திற்கு வந்து சேர குடும்பத்துடன் உள்ளே செல்ல அப்போது பாக்யா அப்பளக்கட்டை காணவில்லை என கடைக்காரருக்கு போன் போட்டு சொல்ல பாக்கியாவின் குரலை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். குரல் எங்கே இருந்து வருகிறது எனத் தேட பிறகு ராதிகாவின் அண்ணன் அது கேட்டரிங் ஆளுங்க என சொல்ல கோபி அமைதியாகி விடுகிறார்.
அடுத்ததாக கோபியின் அப்பா ராதிகா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு வீடு பூட்டி இருப்பதை பார்த்து அக்கம் பக்கம் பக்கத்தாரிடம் விசாரிக்க ராதிகாவுக்கு கல்யாணம் போரூரில் ஒரு பெரிய மண்டபத்துல நடத்துறதா கேள்விப்பட்டோம் என சொல்ல இவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு ராதிகாவும் கோபியும் ரிசப்ஷனுக்கு தயாராக பாக்கியா சமையல் செய்து முடித்துவிட்டு ரிசப்ஷன் தொடங்கி விட்டதா என்று பார்க்க வெளியே வர மயூவை பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.