Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா.. வருத்தப்பட்ட ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்யாவை மயூரா பார்க்க பாக்கியா இங்க என்ன பண்ணுற கல்யாணத்துக்கு வந்தியா? என கேட்க ஆமாம் அம்மாவோட கல்யாணம் என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். நீங்களும் கல்யாணத்துக்கு தான் வந்தீங்களா என கேட்டு பாக்கியாவை கீழே கூட்டி செல்கிறார்.

இந்தப் பக்கம் செல்வி மாலையும் கழுத்துமாக கோபியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து பாக்கியாவிடம் ஓடி வந்து அவளைக் கூட்டிக் கொண்டு கீழே செல்கிறார். கோபி ராதிகாவை மாலையும் கழுத்துமாக பார்த்ததும் பாக்யா அதிர்ச்சி அடைந்து பேசாமல் அப்படியே நிற்கிறார். இவர்களை பார்த்ததும் ராதிகாவின் அம்மா வந்து இங்கே எதற்கு வந்தீங்க பிரச்சனை பண்ண வந்தீங்களா என கோபப்பட செல்வி உங்களுக்கு வெட்கமா இல்லையா என கோபியை பார்த்து கேள்வி கேட்க கோபி எனக்கும் அவளுக்கும் என்ன உறவு இருக்கு விவாகரத்து வாங்கிட்டு என்னை வெளிய அனுப்புனவ தானே என சொல்லி சத்தம் போடுகிறார். இனிமே ராதிகா தான் என் பொண்டாட்டி என சொல்கிறார்.

பிறகு ராதிகாவின் அம்மா இவங்களுக்கு யாரு கேட்டரிங் ஆர்டர் கொடுத்தது. இப்பவே இவங்க வெளிய போகணும் என சொல்ல மேனேஜர் அதை நான் முடிவு பண்ண முடியாது ஓனர் தான் முடிவு பண்ணனும். நான் பேசிட்டு சொல்றேன் என கூறுகிறார். அடுத்ததாக ராதிகா வருத்தப்பட்டு ரூமுக்குள் சென்றுவிட கோபி அவளை சமாதானப்படுத்த பிறகு இனிமே இவ சமைக்க வேண்டாம் வெளியே போக சொல்லுங்க என கோபி ராதிகாவின் அண்ணனிடம் சொல்கிறார்.

இந்த பக்கம் செல்வி கல்யாணத்தை நிறுத்திட்டு கிளம்பி போகலாம் என சொல்ல ஆர்டரை முடிச்சு கொடுப்பதா வாக்கு கொடுத்திருக்கிறோம் போய் வேலையை பாரு என சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update