சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்று பாக்கியா ராதிகாவை பார்க்க சென்றிருந்த நிலையில் ராதிகாவின் அம்மா பாக்யா நாடகம் போடுகிறார் கோபி எந்த விதத்திலும் சந்தோஷமாக இருக்க கூடாது என நினைக்கிறார் என ராதிகா மனத்தைக் கலைக்க பார்க்கிறார். ஆனால் பாக்கியா உங்களது பிரச்சனை எல்லாம் தீர்ந்து நீங்க பழையபடி சந்தோஷமா இருக்க வேண்டும் நல்ல முடிவா எடுங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
வீட்டில் எல்லோரும் பிக்னிக் போவது பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வந்து உட்கார இனியா அவரையும் பிக்னிக் அழைக்கிறார். ஆனால் கோபி டாடிக்கு நிறைய வேலை இருக்கு என்னால வர முடியாது இன்னொரு நாள் போகலாம் என சொல்ல எல்லோரும் பிளான் பண்ணி விட்டோம் என இனியா கூற அப்படினா நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க என கூறுகிறார். கோபி இப்படி சொன்னதால் கோபப்படும் இனிய எப்போதும் நீங்க இப்படித்தான் அவாய்ட் பண்றீங்க, எழில் அண்ணா படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டு போறேனு சொன்னீங்க அதுவும் செய்யல என கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.
இந்தப்பக்கம் ராதிகா மயூவிடம் கோபியிடம் பேசவேண்டும் பழகவேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க அவர் என்னுடைய ஸ்கூல் பிரெண்ட் கிட்ட எல்லார்கிட்டயும் நீங்க அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன். இப்போ ரெண்டு பேருக்கும் சண்டனு சொல்ல எல்லோரும் கேலி பண்ணி சிரிக்கிறாங்க என வருத்தப்படுகிறார். நீங்க கோபி அண்ட் கடை கல்யாணம் பண்ணிக்கங்க என மயூரா சொல்ல ராதிகா அதெல்லாம் நடக்கவே நடக்காது என கூற கோபித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு இந்த பக்கம் கோபி இனியா தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கும்போது வந்து அமர்ந்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். உங்களுக்கு என் மேல பாசமே இல்லை என சொல்ல உனக்கு நிறைய பாசம் இருக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் உன்ன பத்தி மட்டும் தான் யோசித்துக் கொண்டே இருப்பேன் என கோபி கூறுகிறார். அப்படி என்னதான் பிரச்சனை இந்த பிசினஸ்ல பிரச்சனைனா வேற பிசினஸ் பண்ணலாம்ல என இனியா சொல்ல கோபி அமைதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.