தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா வாக்கிங் சென்றதற்கு அப்போது ஒரு பெண்மணி உங்க வீட்டுக்காரர் வேற கல்யாணம் பண்ணிக்கணும் இதே தெருவுல வந்து இருக்காரு உங்களுக்கு வருத்தமாக இல்லையா? உங்க பொண்ணு வேற அவங்களோட போயிட்டா அது உங்களுக்கு கஷ்டமா இல்லையா? என் பொண்ணை இப்படி எல்லாம் வளர்க்கல என பேச பாக்கியா தக்க பதிலடி கொடுக்கிறார்.
அதன் பிறகு அந்த ஏரியாவின் தலைவர் பாக்யாவிடம் கோபி பற்றி பேச அவருக்கும் தக்க பதிலடி கொடுக்கிறார். இது எல்லாம் கோபி பார்த்து ஷாக் ஆகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் எழில் வருத்தமாக இருக்க பாக்கியம் நடந்த விஷயத்தை விசாரிக்க அப்போது எழில் அமர்த்தா ஊருக்கு சென்று விட்ட விஷயத்தை சொல்கிறார். இது பற்றி பேசி வருத்தப்பட பாக்கியா ஆறுதல் கூறுகிறார்.
பிறகு வீட்டில் இனியா மயூ உட்கார்ந்து இருக்க அப்போது ராதிகா வந்து இருவரிடமும் என்ன பிரேக்பாஸ்ட் வேணும் என கேட்க இனியா அமைதியாகவே இருக்கிறார். அதன் பிறகு கோபி வந்ததும் இருவருக்கும் ஹெல்த் மிக்ஸ் செய்து பிரேக்ஃபாஸ்ட் எனக்கு கொடுக்க இனியா இது எனக்கு வேண்டாம் எனக்குள்ள கோபி உடம்புக்கு ரொம்ப நல்லது சாப்பிடு என கட்டாயப்படுத்த இனியா எனக்கு வேண்டாம்னா விடுங்க என சத்தம் போடுகிறார்.
கோபி குழந்தைகளுக்கு பிடித்தது சமைச்சு தரலாம் இல்ல என ராதிகாவிடம் சொல்ல ராதிகா நான் கேட்டா பதில் சொல்லணும் அமைதியா இருந்தா நான் எப்படி தெரிஞ்சுக்க முடியும்? நான் என்ன பேயா இல்லையா என்னிடம் பேசினா என்ன என ராதிகா கேட்க எனக்கு உங்ககிட்ட பேச புடிக்கல, நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? நீங்க யாரு? என கேட்க இந்த வயசுல இந்த ஆட்டிடியூட் ரொம்ப தப்பு என ராதிகா கோபப்பட இனியா எனக்கு உங்க சாப்பாடு தேவை இல்லை என எழுந்து போகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
![baakiyalakshimi serial episode update](https://b3585245.smushcdn.com/3585245/wp-content/uploads/2022/11/baakiyalakshmi21-1.jpg?lossy=2&strip=1&webp=1)