தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியாவை சமாதானப்படுத்திய கோபி பிறகு மறுநாள் மீண்டும் ராதிகா வீட்டிற்குச் சென்று மயூவை பார்த்து அவருக்கு சாக்லேட் கொடுக்க அதனை மையு வாங்க மறுக்க வாங்கிக்கோ என கோபி கொடுக்க ராதிகா இதனை தட்டி விடுகிறார். பிறகு கோபியுடன் உங்களத்தான் வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொல்கிறேன் இல்ல எதுக்கு வந்து எங்கள டார்ச்சர் பண்றீங்க என்ன சத்தம் போட அக்கம்பக்கத்தார் வந்து சூழ்ந்து விடுகின்றனர். ராஜேஷும் இதையெல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்.
பிறகு ராஜேஷ் சென்று மயூவை தன்னிடம் அழைக்க அது ஒரு பக்கம் பிரச்சனையாகிறது. பிறகு ராதிகா உள்ளே சென்றுவிட ராஜேஷை கோபியிடம் என்ன கழட்டி விட்டுட்டு உன் கூட சுத்திக்கிட்டு இருந்தா இப்போ உன்னையும் கழட்டி விட்டுட்டு யார் கூட சுத்தற என கேட்க கடுப்பான கோபி ராஜேசை தாக்குகிறார். பிறகு கோபி அங்கிருந்து கிளம்பி விட ராஜேஷ் ராதிகாவை வெளியே அழைத்து நான் குடிகாரனு என்னை கழட்டி விட்ட. இப்போ கோபியர் கழட்டி விட்டுட்டு எவன் கூட சுத்தற என கேட்க ராதிகா கண்கலங்கி அழுகிறார்.
பிறகு ராதிகாவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு அவருடைய அம்மா ராஜேஷை திட்டி அனுப்புகிறாள். கோபி வீட்டுக்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் இந்த சண்டை எல்லாம் பார்க்க செல்வி வீட்டுக்கு வந்து ராதிகா வீட்டில் ஒரே பிரச்சனை அவருடைய வீட்டுக்காரர் சண்டை போட்டுட்டே இருந்தார் போல என கூற கோபி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் செல்வி தன்னை பார்க்கவில்லை என தெரிந்ததும் அவர் நிம்மதி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.