தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் தேர்தலில் ஜெயித்த பாக்யா மேடையில் ஏறி அனைவருக்கும் நன்றி கூறுகிறார். கோபியின் மேடையில் பேசிய பேச்சுக்களுக்கு முதலில் அமைதியாக இருந்த பாக்கியா தற்போது பதில் அளிக்கிறார்.
பாக்கியா பேச ஆரம்பித்ததும் கோபி ராதிகாவை கூப்பிட்டு கிளம்ப கோபியின் அப்பா அவர்களின் தடுத்து நிறுத்தி பாக்கியா பேச்சை கேட்க வைக்கிறார். அடுத்து வீட்டுக்கு வரும் பாக்யாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார் ஈஸ்வரி. பின்னர் கோபிநாத் அப்பா மாலை வாங்கி வந்து பாக்யாவின் கழுத்தில் போட்டு பாராட்டு தெரிவிக்கிறார்.
மறுபக்கம் ராதிகா கோபியும் வீட்டுக்கு வந்தது மயூரா நீங்க ஜெயிச்சிட்டிங்களா என கேட்க நீ உள்ள போ மையு என ராதிகா அனுப்பி வைத்துவிட்டு சோபாவில் கடும் கோபமாக உட்காருகிறார்.. கோபி சமாதானம் செய்ய முயற்சி செய்ய நான் உங்ககிட்ட தேர்தலில் நிற்கிறேன் என்று கேட்டனா எனக்கு இதெல்லாம் தேவையா? ஏற்கனவே காய்கறி வாங்க போகும் போது இந்த ஏரியாவுல இருக்கவங்க எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்க இப்போ இன்னும் அசிங்கமா போயிடுச்சு வெளியில் தலை காட்டவே முடியாது என கோபப்படுகிறார்.
பின்னர் நான் பாக்கியாவை ரொம்ப இந்த இன்னசென்ட்னு நினைச்சேன் ஆனா அவங்க அப்படி இல்லவே இல்ல, இனிமே இந்த ராதிகா யாருன்னு நான் காட்டுறேன் என சொல்லி உள்ளே எழுந்து செல்கிறார். கோபி என்னடா பண்ணி வச்சிருக்க இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என புலம்புகிறார்.
அடுத்து பாக்கியா ராஜசேகரை சந்திக்க செல்ல அப்போது பேங்கில் இன்னும் லோன் கிடைக்கவில்லை என சொல்ல அவர் தன்னுடைய பைனான்சியிலிருந்து பணத்தை கொடுக்க முடிவு செய்து பணத்தை கொடுக்க பாக்யா சந்தோஷப்படுகிறார். அதே சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.