Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட ரேஷ்மா..!

baakiyalakshimi serial reshma latest speech

பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்ட கேள்விக்கு ரேஷ்மா பதிலளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவிற்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் செயல்பட்டு வரும் நிலையில் பாக்கியா கோபியை வீட்டை விட்டுப் போக சொல்லுகிறார். ஆனால் கோபி இனியாவுக்காக நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என முடிவெடுத்துள்ளார். பாக்கியா என்ன செய்யப் போகிறார் என்று பரபரப்பான கதை காலத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவிடம் பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலளித்த அவர், நான் ராதிகா என்ற கதாபாத்தில் கோபிக்கு டைவர்ஸ் கொடுத்ததுனால எப்பயாவது ஒருமுறை வந்து போவது போல காட்சிகள்தான் எனக்கு இருக்கும். இந்த சீரியல் எனக்கு ரொம்ப டச் நான்கு வருடங்களாக இந்த சீரியலில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

சீரியல் முடிய போகிறது என்று சொல்லி இருக்கிறார்களே தவிர அது எப்போதும் முடியப்போகும் என்பதை இன்னும் சொல்லவில்லை கதை பார்த்தால் உங்களுக்கே புரியும் என கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

baakiyalakshimi serial reshma latest speech
baakiyalakshimi serial reshma latest speech