Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவர் மற்றும் குழந்தையுடன் புத்தாண்டு கொண்டாடிய பாக்கியலட்சுமி ரித்திகா..!

baakiyalakshimi serial rithika daughter video viral

மகளின் முகத்தை முதன்முறையாக காட்டியுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா.

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் திருமணத்திற்கும் பிறகும் சில வாரங்கள் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால் திடீரென்று சீரியலில் இருந்து விலகிய ரித்திகா சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்திருந்தது. இதுவரை குழந்தையின் முகத்தை வெளிக்காட்டாமல் இருந்த ரித்திகா தற்போது புத்தாண்டு நன்னாளில் குழந்தையின் முகத்தை வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை வருகின்றனர்.