தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
எதார்த்தமான நடிப்பால் எமோஷன், சீரியஸ், நகைச்சுவை என அனைத்திலும் கை தேர்ந்த நடிகராக இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தினமும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது கூறி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அமரர் வாகனம் ஒன்றின் பின்னாடியில் நின்று இவ்வளவு பிரமாண்டமே இருக்கே அர்ஜுனன் குருச்சேத்திரப் போரில் பயன்படுத்திய வாகனமும் இல்ல கர்ணன் ஓட்டிய வாகனமா என்று பார்க்க வருகிறீர்களா அதுதான் இல்லை இது அமரர் வாகனம் என பேச ஆரம்பிக்கிறார் சதீஷ்.
செத்த பிறகு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? இறந்த பிறகு உன்னை மண்ணுக்கோ இல்ல நெருப்புக்கோ இரையாகப்போகிறோம்.
அப்படி இருக்கும்போது இவ்வளவு ஆடம்பரம் எல்லாம் தேவையா? போகும்போது ரோட்ல மத்தவங்களுக்கு தொந்தரவு செய்ய பண்ணிக்கிட்டு அவர்களுடைய சாபத்தை வாங்கிட்டு போகணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
