Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதறி அழுவும் ராதிகா, பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial today episode update 03-12-2024

ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செல்வி மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் செல்வி பாக்யாவிடம் முன்னாடி எல்லாம் தப்பு பண்ணவர்களுக்கு தண்டனை கிடைக்கும்னு சொல்லுவாங்க ஆனா இப்போ கண் முன்னாடியே எல்லாருக்கும் நடந்தது எல்லாருமே அனுபவிச்சிட்டு தான் போறாங்க என்று சொல்லுகிறார். நீ எதுவும் கவலைப்படாத அக்கா உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி உன்னையே வேணாம்னு சொன்ன, ஆளு கடைசியா மாரடைப்பு வந்து யாரோ உதவிக்கு இல்லாம நீ வந்து காப்பாத்துற மாதிரி ஒரு நிலைமை இருந்திருக்கு. இதைவிட அவங்களுக்கு ஒரு தண்டனை கிடைக்கணுமா என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ராதிகா பாக்யா வைஃப் என்று கையெழுத்து போட்டதை நினைத்தும், பாக்யாவின் குடும்பத்தினர் பேசியதையும் நினைத்து மழையில் நடந்து கொண்டு அழுது கொண்டே வருகிறார். இதற்கு முன் பாக்யா மழையில் நடந்து வந்தது போல் ராதிகாவும் வருகிறார். வீட்டுக்கு வந்த ராதிகா நனைந்து கொண்டே வந்ததை பார்த்து நான் போய் டவல் எடுத்துக் கொண்டு வரேன் என்று ராதிகாவின் அம்மா கிளம்ப, ராதிகா அப்படியே உட்கார்ந்து கதறி அழுகிறார். மயு அழுது கொண்டே என்னாச்சுமா என்று கேட்க ஒன்னும் இல்ல அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் இருக்காங்க நீ போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு ராதிகாவின் அம்மா மயுவ சமாதானப்படுத்த அப்படி சொன்னியா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லமா நிஜமாகவே அவரு ஹாஸ்பிடல்ல தான் இருக்காரு அதுவும் கொஞ்சமா இல்ல அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபரேஷன் பண்ணி இருக்காங்க என்று சொல்லி அழுகிறார். நாங்க போன என் அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க பாக்யா ஒய்ப்னு கையெழுத்து போட்டு இருக்காங்க அவரு பாக்யாவதா கூப்பிட்டு இருக்காரு என்ன கூப்பிடல என்று சொல்ல நீ தான் போன் எடுக்கலையே விடு உயிர் போற பயத்துல யார கூப்பிட்டால் என்ன என்று சொல்லி ராதிகாவை சமாதானப்படுத்துகிறார் இது மட்டுமில்லாமல் ராதிகா நா கோப்பிய கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதுமா என்று சொல்லி அழுகிறார்.

பிறகு கோபியை பார்க்கலாம் என்று டாக்டர் வந்து சொல்லி டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க என்று சொல்லுகின்றனர் பிறகு குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்கி கோபியிடம் நின்று பேசுகின்றனர். இவர்கள் பேசுவதை பார்த்து கோபி பேச முயற்சிக்க ஆனால் அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை

இதனால் குடும்பத்தினர் அனைவரும் வெளியே வர பாக்யா எப்படி இருக்கிறார் அத்தை என்று கேட்க, பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு பாக்கியா அவனால பேசக்கூட முடியல என்று சொல்லுகிறார் ஈஸ்வரி. நீங்க போய் பாத்துட்டு வா பாக்கியா என்று சொல்ல நான் போக மாட்டேன் அத்தை என்று சொல்லுகிறார் எழிலிடம் சொல்ல நானும் போக மாட்டேன் என்று எழிலில் சொல்லப்படுகிறார். உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க எழில் ஈஸ்வரிடம் அவருக்கு இது மாதிரியானது வருத்தமா தான் இருக்கு ஆனா அவருக்கு உடம்பு சரியில்லை என்றதுனால அவர் மேல எந்த தப்பும் இல்லை என்று சொல்ல முடியாது அவர் தப்பே பண்ணனும்னு சொல்ல முடியாது என்று பேச ஈஸ்வரி வாக்குவாதம் செய்கிறார் உடனே பாக்யா ஹாஸ்பிடல் எந்த பிரச்சனையும் வேணாம் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார் நான் வீட்டுக்கு வந்தா ராதிகா இங்க வருவா அதனால நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார் ஆனால் உங்களுக்கு என்ன பிரச்சனை வாங்க என்று சொல்ல ஈஸ்வரி நீங்க மட்டும் நான் சொல்றதை கேக்குறீங்களா நான் மட்டும் கேட்கணுமா கேட்க முடியாது என்று சொல்லிவிடுகிறார் உடனே இனியாவை வா காலேஜுக்கு போகணும் என்று கூப்பிட நானும் வரமாட்டேன் டாடி ரீசார்ஜ் ஆகிற வரைக்கும் நான் வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார் இதனால் பாக்யா சண்டை எதுவும் போடாம அமைதியா இரு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

பிறகு ராதிகா வர என்ன நடக்கிறது? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 03-12-2024