Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவை நினைத்து கண்கலங்கிய பாக்யா, குற்ற உணர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshimi serial today episode update 04-07-25

சுதாகர் திட்டம் ஒன்று போட இனியா முடிவு ஒன்று எடுக்க உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி காரில் பாக்யாவிடம் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் பாக்யா நீ சொல்ற பேச்சை கூட கேக்கல என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் அந்த ஆள சும்மா விடமாட்டேன் என்ன மன்னிச்சிடு பாக்யா என்று சொல்லுகிறார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல எல்லாரும் கல்யாணத்துலையும் போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை வந்துகிட்டே இருக்கு என்று சொல்லுகிறார்.

ஜெனி இனியாவிடம் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கீங்க இனியா எங்கிட்ட சொல்லல அப்பவே சொல்லி இருந்தினா அந்த நிதிஷ ஜெயில்ல புடிச்சு போட்டு இருக்கலாம் இல்ல என்று சொல்லுகிறார். உடனே பாக்யாவும் கோபியும் வீட்டுக்கு வர என்ன நடந்தது என்று இவர்கள் கேட்கின்றனர். அதற்கு பாக்யா அவரு பையனுக்கு ஏற்கனவே இந்த பழக்கம் இருக்கிறது உண்மைதான் இனியாவ கல்யாணம் பண்ணி வச்சா தெரிந்திடுவார் என்று சொன்னாரு என்று சொல்ல உடனே ஈஸ்வரி அவங்க பையனை திருத்துவதற்கான நம்ம பொண்ண பெத்து வச்சிருக்கோம் என்று கேட்கிறார். வேற என்ன சொன்னாங்க என்று கேட்க அவரு ரொம்ப திமிரா பேசுறாரு எங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்த உங்களை சும்மா விட மாட்டேன் என நான் சொன்னேன் அதுக்கு உங்களால முடிஞ்சத பண்ணிக்கோன்னு சொல்றாரு நம்ம பார்த்தப்ப இருந்த சுதாகர் வேற இப்ப முழுசா வேற என்று சொல்லுகிறார். உடனே இனியா சென்று விட கோபி என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் அவளை பாதாள குழியில தள்ளிட்டேன் என்று வருத்தப்படுகிறார்.

அவ்வளவு பெரிய பணக்காரர் எதுக்கு வந்து நம்ம பொண்ண கேட்கணும்னு நான் ஏன் யோசிக்கல மாப்பிள்ளையை விசாரிக்கணும்னு எனக்கு எதுக்கு தோணல என்று கேட்கிறார். பாக்யா அவ்வளவு தூரம் வேண்டான்னு சொன்னா நான் தான் நம்பல பாக்யாவையாவது நம்பி இருக்கணும் என்று சொல்ல ஈஸ்வரி அவரு நம்பள அவ்வளவு நம்ப வைத்து இருக்காரு அவர் சொன்ன வார்த்தை என்ன நம்பணும் என்று சொல்லுகின்றனர் இப்ப என்ன பண்றது என்று சொல்ல இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம். இனியா முதல்ல நார்மல் ஆகட்டும் எதுவா இருந்தாலும் பொறுமையா பாத்துக்கலாம் இதுக்கு மேல அவசரப்படக்கூடாது என்று முடிவெடுக்கிறார் மறுபக்கம் இனியா ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா வருகிறார் என்கிட்ட எதுவுமே சொல்லல என்று சொல்ல நீ ஏற்கனவே ரெஸ்டாரன்ட் விஷயத்துல எனக்காக நிறைய இழந்துட்டம்மா எதையும் சொன்னா நீ உடைஞ்சு போயிடுவ அதனாலதான் என்று சொல்ல நீ எனக்காக யோசித்து எந்த உண்மையையும் என்கிட்ட மறைக்காத இனியா என்று சொல்லுகிறார்.

உடனே இனியா அப்போ நான் இன்னொன்னு சொல்லவா என்று சொல்லி கேட்டுவிட்ட நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சுமா நான் உன்ன கட்டிப்புடிச்சு தூங்கவா என்று கேட்க இதெல்லாம் ஏன்டா கேட்டுக்கிட்டு இருக்க வா என்று சொல்லி இனியாவை கட்டிப்பிடித்து தூங்க வைக்க பாக்கியா கண்கலங்கி அழுகிறார். மறுநாள் காலையில் சுதாகர் நிதிஷை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்க சந்திரிகா வந்து ஏதாவது முடிந்ததா என்று கேட்க பார்க்கிற இன்னைக்கு இல்ல நாளைக்கு எப்படியாவது அவனை வெளியே எடுத்துட்டு வரணும் என்று சொல்லுகிறார். ஆனா அதுக்குள்ள இனியாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் என்று சொல்ல சந்திரிகா எதுக்கு என்று என கேட்கிறார்.

அவை இந்த வீட்டோட மருமக அதுவும் இல்லாம அவங்க வீட்டுல இருக்குறவங்க இப்போ நம்ம மேல கோவமா இருப்பாங்க ஏதாவது கேஸ் கொடுத்தாங்கன்னா நம்ம மூணு பேரும் போய் உள்ள உட்கார வேண்டியதுதான் கோபி யோசிப்பாரு ஆனா இனியாவோட அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்துடுவாங்க அதனால எப்படியாவது இனிய பேசி கூட்டிட்டு வர்றதுதான் நம்மளுக்கு சேப் என்று சொல்லுகிறார். பிறகு சந்திரிகா என்ன சொல்லுகிறார்? குடும்பத்தார் இனியாவிடம் என கேட்கின்றனர்?இனியாவின் பதில் என்ன ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 04-07-25
baakiyalakshimi serial today episode update 04-07-25