Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா எடுத்த முடிவு, கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யாவிற்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரன்ட் வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தனியாக எழுந்து சென்று எழில் பேசியதை நினைத்து கண்கலங்கி அழுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து அவரையே சமாதானப்படுத்திக் கொண்டு வந்து வேலையை பார்க்கிறார். மறுநாள் காலையில் எல்லா ஆடரையும் ஏத்தி விட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு உள்ளே வந்து பாக்கியா அனைவரையும் கூப்பிடுகிறார்.

எல்லாருக்கும் சாப்பாடு அரேஞ்ச் பண்ணி இருக்கேன் ரெண்டு வேலையும் சாப்பிட்டு பொறுமையா போங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஆனந்திற்கு ஃபோன் வருகிறது. அவன் கவனித்து பாக்கியா கிட்ட வந்து பார்க்க கோபிநாத் என தெரிய வருகிறது உடனே போனை வாங்கி பார்த்துவிட்டு செல்வியிடம் ரொம்ப நாளா நீ கேட்டுகிட்டு இருந்த கேள்விக்கு விடை கிடைக்கப் போகுது வா என்று சொல்லிவிட்டு ஸ்பீக்கர் போட சொல்லுகிறார். பிறகு கோபி ஆயுத பூஜை வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா எப்ப ரெஸ்டாரன்ட் இழுத்து மூடுவாங்க என்பதில் தொடங்கி பிரியாணியில் கெட்டுப்போன கறியை கலந்த விஷயமாக கொண்டு மொத்தத்தையும் உளறி விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகி செல்வி ஆனந்தின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார்.

இவன நம்பி வேற ஆயுத பூஜை ஆர்டர் பண்ணி இருக்கோம் கா எல்லாத்தையும் ரிட்டன் வர சொல்லு என்று சொல்ல எந்த தப்பும் நடக்கல செல்வி கம்முனு இரு என்று சொல்லி இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அதன் பிறகு பாக்யா ஆனந்தை கூப்பிட போது நடந்த விஷயத்தை செல்வியிடம் சொல்லுகிறார். அப்போதே பாக்யாவிடம் ஆனந்த் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு இருப்பதையும் சொல்லுகிறார். இந்த பிரியாணியை சாப்பிட்ட அவரது குழந்தை உடம்புக்கு முடியாமல் இருந்து இப்பதான் சரியாகி வந்திருக்கும் உண்மையையும் சொல்லி இனிமே நான் தப்பு பண்ண மாட்டேன் மேடம் என்று சொன்னதால்தான் வேலையில் சேர்த்திருப்பதாகவும் சொல்லுகிறார்.

கோபி சார் என்ன மேடம் பண்றது என்று சொல்ல நீங்க அவருக்காக பேசுற மாதிரியே பேசிகிட்டு இருங்க ஆனா எனக்கு உண்மையா வேலை பண்ணுங்க என்று சொல்லி அவரை வேலைக்கு சேர்த்துள்ளார் பாக்யா.

செல்வி கேட்ட கேள்வி என்ன? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? பாக்கியா எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update

baakiyalakshimi serial today episode update